Version: 1.3

கர்த்தரிடமிருந்து கேட்டல்

Other languages:
More information about Tamil

கர்த்தர் எல்லோரிடமும் பேச விரும்புகிறார். கர்த்தர் பேசும் விதங்களை நாம் அறிந்திருக்கிறோமா? மேலும் அவர் சொல்வதைக் கேட்டு, செய்யத் தயாரா?

இங்கே “கேட்டல்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், ஆனால் கர்த்தர் பரிசுத்த ஆவியானவர் என்பதையும், நம்முடன் தொடர்பு கொள்ளுவதற்கு நமது புலன்களனைத்தையும் பயன்படுத்துகிறார் என்பதையும் நாம் அறிந்திருக்கவேண்டும். அதன் பொருள், நாம் உண்மையில் கர்த்தரை “உணர்ந்து” இருக்கிறோம்.

எல்லோரும் கர்த்தரிடமிருந்து ஏதாே ஒன்றைக் கேட்கலாம். ஆனால் அவரிடமிருந்து தவறாமல் கேட்ப்பதற்கும், கர்த்தருடனான உறவில் வாழ்வதற்கும், நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவது அவசியம். பின்னர் அவர் நம்மில் வாழ்ந்து, நம்முடைய சிந்தனையையும் உணர்வுகளையும் மேலும் மேலும் மாற்றி அமைக்கிறார், இதனால் கர்த்தர் நமக்கு என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை இன்னும் தெளிவாக உணர முடியும்.

கர்த்தருக்கும் நமக்கும் இடையிலான தொடர்பைத் தடைப்படுத்தும் வேறு தடைகளும் இருக்கலாம். இது, நாம் விலகிச் செல்ல வேண்டிய பாவமாகவோ, அல்லது கவனச் சிதறலாகவோ, அல்லது ஒரு காயமாகவோ இருக்கலாம். இவற்றை எவ்வளவு அதிகமாக நாம் சுத்தம் செய்கிறோமோ அவ்வளவுக்கு நாம் நன்றாக கர்த்தரிடம் இருந்து கேட்கமுடியும்.

நாம் கர்த்தரை அறிவோம், ஒரு நல்ல நண்பனோடு இருப்பது போல் அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு வாழ்வதே இதன் நோக்கம்.

கர்த்தரை உணருவதிலிருந்து என்னைத் திசை திருப்புவது என்ன? என் வாழ்க்கையில் நான் கர்த்தருக்குச் செவிசாய்க்க விரும்பாத பகுதிகள் உள்ளனவா? ஏன்?

பரிசுத்த ஆவியானவர் என்னில் வாழ்கின்றார் என்பதில் உறுதியாக இருக்கிறேனா?

கர்த்தர் நம்மிடம் பேசும் வழிகள்

பரிசுத்த வேதாகமம்

பரிசுத்த வேதாகமம் நம் அனைவருக்கும் கர்த்தரின் கடிதம் போன்றது, கர்த்தர், நாம் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்து முக்கிய விடயங்களையும் கொண்டுள்ளது (2 தீமோத்தேயு 3:16). கர்த்தர் பேசும் அனைத்தும் பரிசுத்த வேதாகமமத்துடன் உடன்படும்.

மற்றவர்கள்.

உங்கள் தலைவர்கள் அல்லது பயிற்சியாளர்கள் மூலம் கர்த்தர் உங்களிடம் பேசுவது இயல்பானது. ஏனெனில் உங்களை வழிநடத்துவதற்கு முக்கியமான ஒருவராகவும், மற்றும் பொறுப்பையும் கர்த்தர் அவர்களுக்கு வழங்கியுள்ளார். கர்த்தர் தனது குடும்பத்தைக் (திருச்சபையை)கட்டியெழுப்ப மற்றச் சகோத சகோதரிகளுக்கு நம்மை வழிநடத்தும் முக்கியமான ஒருவராயும், அல்லது ஞானத்தையும் அவர்களுக்குக் கொடுக்கிறார். எனவே யாரோ ஓருவர் உங்களிடமிருந்தும் வரலாம், மற்றும், அவர்கள் உங்களுக்காகச் சொன்ன வார்த்தைகள் கர்த்தரிடமிருந்து வந்ததாகவும் இருக்கலாம்.

மனதிலுள்ள எண்ணங்களும் மற்றும் பதிவுகளும்

பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாழும்போது, அவர் நம் எண்ணங்களை வடிவமைத்து, எந்த நேரத்திலும் நமக்கு அபிப்பிராயங்களைத் தர முடியும். இது நம் மனசாட்சி மூலமாகவும், கர்த்தர் விரும்பும் விஷயங்களை நமக்கு நினைவூட்டும் எண்ணங்கள் மூலமாகவும் இருக்கலாம். அல்லது நம் மனக்கண்ணில் தோன்றும் தரிசனமாகவும்(நம் மனதில் ஒரு படம் போன்ற ஒன்றைக் காணுதல்)நாம் காணலாம், இதன் மூலம் கர்த்தர் நமக்கு ஏதையாவது காட்ட விரும்புகிறார் (அப்போஸ்தலர் 10:10-11).

சம்பவங்கள்

கர்த்தர் நமக்கு கண்கள், காதுகள் மற்றும் மனம் ஆகியவற்றைக் தந்துள்ளார், அதனால் நாம் அவற்றைப் பயன்படுத்துகிறோம். சில நேரங்களில் நாம் உதவி செய்ய வேண்டிய ஒருவரைப் பார்க்கிறோம். இது மனிதர்களை ஒருவரை ஒருவர் சந்திக்க வைப்பதன் மூலம் கர்த்தர் பேசுவதாக இருக்கலாம். இத்தகைய சூழ்நிலைகளில் நாம் முதலில் அவதானித்து, பின்பு நமது பொறுப்பு என்ன என்று கர்த்தரிடம் கேட்கவேண்டும் (மத்தேயு 11:2-6; 27:54).

சொப்பனங்கள்.

நாம் தூங்கும்பொழுது கர்த்தர் நம்மிடம் பேச முடியும். சொப்பனங்கள் எதைக் குறிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு நாம் அவற்றைக் கற்றுக்கொள்ளலாம் (யோபு 33: 14-17; ஆதியாகமம் 40: 1-41: 40; மத்தேயு 1:20).

இதில் எந்த வழிகளின் மூலமாக கர்த்தர் என்னிடம் அடிக்கடி பேசுகிறார்? இந்தப் பகுதியில் நான் மேலும் கற்றுக்கொள்வது எப்படி? வேறு எந்த பகுதியில் கர்த்தரை உணர்ந்து கொள்ள நான் கற்றுக்கொள்ள வேண்டும்?

மூன்று வெவ்வேறு குரல்கள்.

நம் வாழ்வில் நாம் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களைக் கேட்கிறோம், எனவே அவை எந்த வழி மூலமாய் வந்தன என்பதை அறிய நாம் கற்றுக்கொள்ள வேண்டும்: கர்த்தரிடமிருந்தா? மக்களிடமிருந்தா(நானும் மற்றவர்களும்)? அல்லது சாத்தானிடமிருந்தா?
இவைகள் வெவ்வேறு குரல்களின் பண்புகள்:

கர்த்தரின் குரல் மக்களின் குரல் சாத்தானின் குரல்
  • ஊக்கமளிக்கும், அன்பு நிறைந்ததும், நல்லதும், பரிபூரணமானதும் (ரோமர் 12:2)
  • சிரமமாக இருக்கலாம்: பாவத்தை வெளிப்படுத்துதல், நமக்கு சவால் விடுதல்.
  • நோக்கம்:கட்டியெழுப்புதல்,

குணப்படுத்துதல், திருத்துதல்

  • நல்ல அல்லது கெட்ட அறிவுரையாக இருக்கலாம்.
  • வரையறுக்கப்பட்ட முன்னோக்கு
  • சொந்த அனுபவங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் மூலம் வடிகட்டப்பட்டது.
  • பயப்படுத்துதல், ஊக்கமளியாமை
  • பிரிவினையை ஏற்படுத்துதல், முரண்பாடுகளை உண்டுபண்ணுதல்
  • நோக்கம்: அவமானப்படுத்துதல், குற்றம் சாட்டுதல், குற்றம் சுமத்துதல், அழ வைத்தல்

பயிற்சி: நீங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் இணைக்கப்பட்ட எண்ணங்களையும் குரல்களையும் அவற்றின் ஆதாரங்களின்படி கர்த்தர், மக்கள், சாத்தான் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கவும்.

பகுத்தறிவு: கர்த்தரிடமிருந்து என்ன? (1 தெசலோனிக்கேயர் 5:19-21)

  • இதைப் பற்றி பரிசுத்த வேதாகமம் என்ன சொல்கிறது? பரிசுத்த வேதாகமம் தான் எதையாவது சோதிப்பதற்கான மிக முக்கியமான அதிகாரம் கொண்டது. பரிசுத்த வேதாகமத்தில் உள்ள கர்த்தரின் கொள்கைகளுக்கு முரணாக ஏதாவது இருந்தால், அது கர்த்தரிடமிருந்து வந்ததல்ல.
  • அது நல்லா உள்ளதா? அது கர்த்தரின் தன்மையுடன் ஒத்துப்போகிறதா?
  • முதிர்ச்சி அடைந்த மற்றச் சகோதர சகோதரிகள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் தலைவர் அல்லது பயிற்சியாளரிடம் ஆலோசனை கேட்கவும்.
  • எனக்குக் கிடைத்த ஆதாரம் எந்தளவு நம்பகமானது?

நம் வாழ்க்கையைப் பற்றிய ஒவ்வொரு விவரத்தையும் கர்த்தர் நமக்குக் கட்டளையிட விரும்பவில்லை – தெரிவு செய்வதற்கான சுதந்திரத்தை அவர் நமக்குத் தருகிறார். அவரை நம்புவதன் மூலமும்,நம் முடிவுகளுக்குப் பொறுப்பேற்பதன் மூலமும்நாம் அவருக்கு நெருக்கமான படிமுறைகளை எடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

கர்த்தரின் பதில்களைக் கேட்பதற்கு எளிதாக இருக்கும் சில கேள்விகள் உள்ளன(எடுத்துக்காட்டுகள்: “கர்த்தரே, நான் யாரை மன்னிக்க வேண்டும்?” “என் வாழ்க்கையில் பாவத்தை நீங்கள் எங்கே பார்க்கிறீர்கள், நான் மனந்திரும்ப விரும்புகிறீர்களா?”)
மற்ற கேள்விகளுடன் கர்த்தரின் குரலைக் கண்டறிவது கடினமாகும். (“கர்த்தரே, நான் யாரை திருமணம் செய்ய வேண்டும்?”), மற்றும் சிலவற்றிக்கு, கர்த்தர் இந்த நேரத்தில் பதிலளிக்க மாட்டார்(“எனது அடுத்த இருபது ஆண்டுகள் எப்படி இருக்கும்?”)
சில நேரங்களில்'ஏன்'என்று கேள்விகளைக் கேட்பதில் மாட்டிக்கொள்கிறோம். பெரும்பாலும் இவை நமது உடனடியான வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் உதவாது, அல்லது பதிலை எங்களால் சமாளிக்க முடியாது, எனவே அதைக் கர்த்தர் நமக்கு வழங்க மாட்டார்.

நான் கர்த்தரிடம் எந்த கேள்விகளைக் கேட்கின்றேன்? அவைகள் நல்ல கேள்விகளா?

கர்த்தரின் குரலைக் கையாளுவதில் இரண்டு உச்ச நிலைகள்:

நம்பிக்கை. கர்த்தர் என்னிடம் பேசுவதில்லை. நான் கேட்பதெல்லாம் கர்த்தரிடமிருந்து.
வழக்கமான: “எனது எண்ணங்கள் கர்த்தரின் எண்ணங்கள் அல்ல.” “கர்த்தர் சொல்கிறார்…!”
“இதை நான் பரிசோதிக்கத் தேவையில்லை.”
உண்மை பரிசுத்த ஆவியானவர் உங்களில் இருக்கின்றார், அதனால் தான் உங்கள் எண்ணங்கள் பல கர்த்தரின் எண்ணங்களாகும்.! நாம் இன்னும் மனிதர்களே, இன்னும் தவறு செய்கிறோம், எனவே நாம் அனைவரும் சில நேரங்களில் கர்த்தரைத் தவறாக புரிந்துகொள்கிறோம்.
பரிந்துரைகள்: உங்கள் எண்ணங்கள் பல கர்த்தரிடமிருந்து வந்தவை என்று கருதுங்கள். எப்போதும் “கர்த்தர் கூறுகிறார் என்று நான் நினைக்கிறேன் ...” என்று தொடங்கவும்.

இந்த இரண்டு உச்சநிலைகளில் எந்தப் பக்கம் நான் முனைகிறேன்? இந்தப் பின்னணி எங்கிருந்து வருகிறது? அதிலிருந்து விடுபட்டு, கர்த்தரின் குரலுடன் நான் எப்படி ஆரோக்கியமாக பழகுவது?