Version: 1.0o

பெருமையையும் கலகத்தையையும் மேற்கொள்வது

Other languages:
More information about Tamil

"நான் விரும்பியதைச் செய்ய விரும்புகிறேன்!" "எனக்கு நன்றாகத் தெரியும்!" "நான் அதை என் வழியில் செய்ய முடியும்!" அந்தச் சத்தம் உங்களுக்கு நன்கு பரிச்சியமா?

நாம் அனைவரும் இதை அனுபவித்திருக்கலாம்: பெருமை,அதிகாரத்தைத் துஷ்பிரவயோகம் செய்தல் மற்றும் கர்த்தருக்கு எதிரான மக்கள் கலகம் செய்தல் போன்றவை நம் வாழ்விலும் நம்மைச் சுற்றியுள்ள உலகிலும் தீங்குகளை ஏற்படுத்தியுள்ளன.நாம் வித்தியாசமாக வாழ வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். பெருமையோ, கலகமோ இல்லாத வாழ்க்கையை மாதிரியாகக் கொண்டு,மக்களை மீட்டெடுத்து,அவர்கள் யார் என்று பார்க்கவும், அவர்களை வழிநடத்தவும் இயேசு கிறிஸ்துவைப் பிதா அனுப்பினார்.

நம்மை நாமே மிகைப்படுத்திக் கொண்டால், நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள அனுமதிக்கிறோம்.நாம் யார் என்பதில் பெரும்பாலானவர்கள் மற்றவர்களைச் சார்ந்து இருக்கிறார்கள் என்பதை நாம் மிக எளிதாக மறந்து விடுகிறோம்.மற்றவர்கள் இல்லாமல் நாம் உயிர் வாழமாட்டோம்.உண்மை என்னவெனில்,பல விஷயங்களில் நமக்குக் கட்டுப்பாடு இல்லை.மேலும் நாங்கள் வரையறுக்கப்பட்டவர்கள்: நமது அறிவு, நமது நேரம் மற்றும் நமது திறன்கள் அனைத்தும் வரையறுக்கப்பட்டவை. கர்த்தர் நம்மைப் சிருஷ்டித்தது மற்றவர்களோடும், கர்த்தரோடும் இணைந்து வாழத்தான்.இருப்பினும், பெருமையும் கலகமும் நம்மை மேற்கொள்வதினால் அவை நம்மைத் தனிமைப்படுத்துவதோடு ஆரோக்கியமான ஐக்கியத்தையும் அழிக்கின்றன.அவை உண்மையைப் பற்றிய நமது பார்வையை அழித்து, கர்த்தருடனான நமது உறவைத் தடுக்கின்றன - இதனால் பெரும்பாலும் நமக்கும் மற்றவர்களுக்கும் அவற்றின் விளைவுகளைக் கூட நாம் பார்க்க மாட்டோம், அல்லது புறக்கணிக்கிறோம்.

ஆணவமும் பெருமையும்

ஏனெனில்,தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தம்மைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். (லூக்கா 18:14)

ஆணவம் என் இருதயத்தில் தொடங்குகிறது - நான் மற்றவர்களை விட சிறந்தவன் என்று நம்புகிறேன்.இந்த நம்பிக்கைக்கு நான் எவ்வளவு இடம் கொடுக்கிறேனோ, அந்த அவ்வளவு பெரிய தீங்குகள்(விளைவுகள்) எனக்கும் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஏற்படும்:நான் என் தவறுகளைப் பார்க்க விரும்பவில்லை,மன்னிப்பு கேட்க முடியாது. நான் மற்றவர்களை அநியாயமாக அல்லது கவனக்குறைவாக நடத்துகிறேன்,ஏனென்றால் நான் அவர்களை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை அல்லது அவர்களைக் கீழ்த்தரமாகப் பார்க்கவும் கூடும்.நான் மற்றவர்களிடம் உதவியோ அல்லது ஆலோசனையோ கேட்க விரும்பாமையால் நம்மை கற்பிக்க முடியாதவர்களாகி றோம். இதன் விளைவாக நான் மேலும் மேலும் யதார்த்தத்திலிருந்து துண்டிக்கப்பட்டு என் சொந்த உலகத்தில் வாழ்கிறேன்.

பெருமை என்பது கர்த்தரைப் போற்றுவதற்குப் பதிலாக தன்னைத் தானே புகழ்வது. மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் வித்தியாசம் உள்ளது: நாம் வெற்றிபெறும்போது, ​அதில் சந்தோசப்பட விரும்புகிறோம். நமது சாதனை கர்த்தரின் பார்வையில் நல்லது என்றால்,நாம் அதை சரியான முறையில் கொண்டாடலாம் மற்றும் கொண்டாட வேண்டும். அவ்வாறு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கர்த்தரே நமக்கு அளித்துள்ளார் என்பதை மறந்து,அவருக்கு நன்றி செலுத்தாமல் இருந்தால் அது ஆரோக்கியமற்றதாகிவிடும்.

இந்த முறைகளுக்கு நேர்மாறானது ஆரோக்கியமான மனத்தாழ்மையே:கர்த்தர் என்னைப் பார்ப்பது போல் நானும் என்னைப் பார்க்கிறேன்.நான் என்னைச் சிறியவனாகவும் பெறுமதி அற்றவனாகவும் பார்ப்பதில்லை (அது தவறான மனத்தாழ்மை) மாறாக,நான் உண்மையில் பெரியவனும் இல்லை, முக்கியமானவனும் இல்லை (அது பெருமையும் மற்றும் ஆணவமும்).

கர்த்தர் நமக்கு வரங்களையும் திறமைகளையும் தந்தார்,அதனால் நாம் அவற்றை நன்மை செய்ய பயன்படுத்துகிறோம்.இந்தப் பொறுப்பைச் கையாளுவதற்கும், வெற்றியில் வரும் ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்கும் கர்த்தர் நமக்கு உதவ விரும்புகிறார். ஆனால்,எனக்கு அவர் தேவையில்லை என்று நான் நம்புவதாலும் மற்றும் எனக்கு எல்லாம் நன்றாகத் தெரியும் என்ற சுயநம்பிக்கையால்,(சுயம்) கர்த்தருடைய வழிகாட்டுதலில் இருந்து என்னைத் துண்டித்துக் கொள்கிறேன்.நமக்கு எது நல்லது என்று கர்த்தர் அறிவார்;நம்முடைய வலிமை மற்றும் பலவீனம் நம்மை விட அவருக்கு நன்றாகவே தெரியும். கீழ்பணிவாக இருப்பது என்பது கர்த்தருக்கும் மற்ற ஞானிகளின் அறிவுரைகளுக்கும் செவிசாய்ப்பதாகும்.

விண்ணப்பம்

கர்த்தவே,என் இருதயத்தில் ஆணவத்தை அல்லது பெருமையை எங்கே பார்க்கிறாய்?

கர்த்தர் உங்களுக்குக் காண்பித்தற்காக அவரிடம் மன்னிப்பு கேளுங்கள். இப்போது அவரிடம் கேளுங்கள்:அதற்கு பதிலாக நான் என்ன நினைக்க வேண்டும்,என்ன செய்ய வேண்டும்?

கலகம்

மனிதர்களாக நாம் எப்படி ஒன்றாக வாழலாம் என்பதற்கு கர்த்தர் ஒரு நல்ல ஒழுங்கை அமைத்துள்ளார். குழப்பம் ஆட்சி செய்வதையோ, இரக்கமற்ற முறையில் மக்கள் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையோ அவர் விரும்பவில்லை. அதனால்தான் அவர் மக்களுக்கு வெவ்வேறு பதவிகளையும்(roles) திறமைகளையும் வழங்குகிறார்,அதனால் நாம் மற்றவர்களின் நன்மைக்காக அவற்றைப் பயன்படுத்துகிறோம். வலிமையானவர்கள் பலவீனர்களைப் பாதுகாக்க வேண்டும்,எனவே அவர்களுக்கும் அதிக பொறுப்பு உள்ளது.

உதாரணமாக, குழந்தைகளை அவர்கள் சொந்தமாக முடிவெடுக்கும் வயது வரை வளர்க்கப் (பாதுகாக்கவும், வழிநடத்தவும்,சரியான வழியில் வழிகாட்டவும்) பெற்றோர்களுக்கு கர்த்தர் கட்டளை கொடுக்கிறார். நாம் இன்னும் குழந்தைகளாக இருக்கும்போது,​​​​நம் பெற்றோருக்குக் கீழ்ப்பணிய வேண்டும்,நாம் வளரும்போது,கர்த்தரை மதிக்கும்படி ​​​நம்மைக் கேட்கிறார்.

கர்த்தர அமைத்த கட்டளைக்கு எதிராக கலகம் நடக்கிறது.நமக்கு உரிமை இல்லாதபோது,​​நமது சொந்த விதிகளின்படி செயல்பட முயற்சிப்பதன் அர்த்தம்: "நான் என் சொந்த வழியை உருவாக்க முடியும்!"

நாம் முதலில் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு நாம் கீழ்ப்படிந்து (ரோமர் 13:1-7) அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார் (1 தீமோத்தேயு 2:1-2).அதில் நமது அரசாங்கம் மற்றும் அரசாங்கப் பணியாளர்கள் அல்லது தலைவர்கள் உள்ளனர்.அவர்கள் அனைவருக்கும் அவர்களின் ஆணைப்படி நம் வாழ்வில் பேசவும் உரிமை உண்டு. நாம் அதை விரும்பாமல் இருக்கலாம்,ஏனெனில் அது நமக்கு செலவாகும்: நாம் வரி செலுத்த வேண்டும் அல்லது நாம் தேர்ந்தெடுக்காத விஷயங்களைச் செய்ய வேண்டும்.நாம் விரும்பியபடி எல்லாவற்றையும் செய்ய முடியாதபோது,​​​​நம் சுதந்திரத்தில் நாம் கட்டுப்படுத்தப்படுகிறோம். இருப்பினும்,கர்த்தர் இந்த உலகத்தைப் சிருஷ்டித்த விதத்தின் ஒரு பகுதி அது. நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்காக இயேசு கிறிஸ்து வரவில்லை. நாம் கர்த்தருக்கு கீழ்ப்பணிய வேண்டும் என்று அவர் விரும்புகிறார் - அதைத்தான் இயேசு கிறிஸ்து நமக்கு முன்மாதிரியாகக் காட்டினார்.

ஆனால் அவர்கள் தவறாக இருந்தால் என்ன செய்வது?

மனிதர்கள் குறையுள்ளவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்.அவர்கள் சொல்வதை நான் வெறுமனே புறக்கணிக்க முடியும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. அதை எப்படி கையாளுவது என்று கர்த்தரிடம் கேட்க வேண்டும்.

அதிகாரத்தில் உள்ளவர்கள் நாம் கர்த்தரின் விருப்பத்திற்கு எதிராக நேரடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் அல்லது அவர்கள் தங்கள் பணிக்கு வெளியே ஆட்சி செய்தால், நாங்கள் அனுமதிக்கப்படுகிறோம், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும் இருக்க வேண்டும்: நாம் மனிதர்களுக்குக் கீழ்படிகிறதைப் பார்க்கிலும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாகும் (அப்போஸ்தலர் 5:29 ) யாரேனும் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால்,நான் அதைச் சுட்டிக்காட்டி, நிவர்த்தி செய்து ஆரோக்கியமான செயல்களுக்குரிய எல்லைகளை அமைக்க முடியும்.நான் உயர் அதிகாரியிடம் முறையிட்டும் உதவியை நாடலாம்.

கர்த்தர் அநீதியையும் அடக்குமுறையையும் வெறுக்கிறார்.அவற்றிக்கு நாமும் இணங்குவதை அவர் விரும்பவில்லை. இருப்பினும்,நாம் எப்படி வேண்டுமானாலும் சண்டையிடவோ அல்லது பழிவாங்கும் உரிமையை அவர் நமக்கு வழங்கவில்லை. மாறாக தீமையை எதிர்ப்பதற்கு கர்த்தர் நம்மை வழிநடத்த விரும்புகிறார்: நீ தீமையினாலே வெல்லப்படாமல்,தீமையை நன்மையினாலே வெல்லுங்கள். (ரோமர் 12:21)

கர்த்தர் நீதியுள்ள நீதிபதி, அவர் நீதியை வழங்குவார். தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி நம்மையோ அல்லது நம்மைச் சுற்றியுள்ள பிறரையோ துன்பப்படுத்துபவர்களை அவர் நியாயந்தீர்ப்பார். மற்றவர்களுக்கு நாம் எங்கு அநீதி இழைத்தாலும் அவர் நம்மை நியாயந்தீர்ப்பார்.

விண்ணப்பம்

கேளுங்கள் கர்த்தவே,நான் யாரை எதிர்த்து கலகம் செய்தேன்?

வெவ்வேறு உறவுகளின் மூலம் இதைப் பார்க்கலாம்: அரசு(போக்குவரத்து மற்றும் வரி விதிகள் உட்பட) மற்றும் அதிகாரிகள்,பெற்றோர்கள் (மாற்றாந்தாய் அல்லது பாதுகாவலர்),மனைவி, தலைவர்கள்,ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், முதலாளிகள், கர்த்தர்

அந்தக் கலகம் எப்படி என் வாழ்க்கையில் வந்தது?

மன்னியுங்கள்:உங்களைப் புண்படுத்துபவர்களை மன்னிப்பதில் ஒரு நல்ல உதவியாளர் உங்களை ஊக்குவிக்கட்டும் ("படிப்படியாக மன்னித்தல்" என்ற பணித்தாள் பார்க்கவும்).

மனந்திரும்புதல்: மன்னிப்புக்காகக் கர்த்தரிடம் கேளுங்கள்.பரிசுத்த ஆவியானவரை உங்களுக்கு உதவவும் உங்கள் இருதயத்தை மாற்றவும் கேளுங்கள்.

நான் எப்படி முன்னேறிச் சென்று அதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

உங்கள் அடுத்த படிகளை எழுதுங்கள்: