பயிற்சிக்கான இணைய தளத்திற்கு வரவேற்கின்றோம். www.4training.net
Welcome! (English) Herzlich willkommen! (Deutsch) Witajcie! (polski) Mirë se erdhët! (shqip)
பயிற்சி வீடியோ | |
நாங்கள்,எங்கள் முதல் பயிற்சிக் காணொளியை முடித்துள்ளோம்.படிப்படியாக மன்னித்தல் - பார்த்துப் பகிரவும்! | |
4training.net வலைஒளி சேனல் |
பங்களிக்க | |
பலர் தங்களிடம் உள்ள, கர்த்தர் அருளிய தாலந்துகளால்(gifts) உதவுவதால் மட்டுமே இந்த வலைத்தளம் சாத்தியமாகும்.உங்களால் எப்படி முடியும் என்பதைக் கண்டறியவும். பங்களித்தல்! | |
மொழிபெயர்ப்பு;|வடிவமைப்பு|
நிரலாக்கம் | காணொளி |மேலும் |
பயிற்சி வளங்கள்
கர்த்தர் தனது இராச்சியத்தை உலகம் முழுவதும் கட்டுகிறார்.அவருடைய வேலையில் நாமும் சேர்ந்து சீடராக்கும் பணியைச் செய்ய அவர் விரும்புகிறார்! இந்த வலைத்தளம் உங்களுக்கு உதவுவது மட்டுமல்லாது, அது பல மொழிகளில் எளிய பயிற்சிப் பணித்தாள்களை உங்களுக்கு வழங்குவதன் மூலம் உங்கள் வேலையை எளிதாக்குகிறது. சிறந்த விடயம்:ஒரே பணித்தாளை வெவ்வேறு மொழிகளில் அணுகலாம்,அதன் மூலம் உங்களுக்கு மொழி புரியவில்லை என்றாலும், அதன் மூலம் அதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்கு எப்போதும் தெரியும்.
பணித்தாள்களை அச்சிடுதல் =
நீங்கள் இதில் உள்ள எல்லா உள்ளடக்கங்களையும் நிகழ்நிலை(online)மூலம் காணலாம்,இணைய தளம் உள்ள இடங்களில் அவற்றைப் பயன்படுத்தலாம்,ஆனால் அனைத்துப் பணித்தாள்களும் PDF ஆகக் கிடைக்கும். நீங்கள் அவற்றை எப்போதும் பதிவிறக்கம் செய்து உங்கள் திறன்தொலைபேசியில் (smartphone) வைக்கலாம், அவை எப்போதும் கிடைக்கும்.மற்றும் அவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் முடியும். உங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் நீங்கள் அச்சிடலாம்: ஒவ்வொரு பணித்தாளும் அதிகபட்சம் இரண்டு பக்கங்கள் மற்றும் ஒரு தாளில் பொருந்தும்.நீங்கள் அடிக்கடி மற்றவர்களுக்குப் பயிற்சியளித்தால் இந்த யோசனை உங்களுக்கானது: நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சில பணித்தாள்களை மட்டும் அச்சிட்டு,அவற்றை ஒரு கோப்பு உறையில் வைக்கவும் அல்லது அவற்றை மடித்து, நீங்கள் வழக்கமாக எடுத்துச் செல்லும் பையில் வைக்கும்போது,அவற்றை நீங்கள் எப்போதும் உங்களோடே வைத்திருப்பீர்கள்,மேலும் வெவ்வேறு சூழ்நிலைக்கும் நீங்கள் தயாராக இருப்பீர்கள்.
சீடத்துவத்தில் மொழித் தடைகளைக் கடப்பது =
நிச்சயமாக நீங்கள் ஆங்கிலப் பணித்தாள்களை எடுத்து, சாதாரணமாக ஆங்கிலத்தில், உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களைச் சீடர்களாக்க அவற்றைப் பயன்படுத்தலாம். இந்த இணையவலைத்தளத்தில் உள்ள ஆதாரங்களுடன் உங்களுக்கு இப்போது இன்னும் ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது:ஆங்கில மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிராத ஒருவரை நெறிப்படுத்தும்போது,அவரது தாய்மொழியில் உள்ள பதிப்போடு சேர்த்து ஆங்கில பணித்தாளைப் பயன்படுத்துவதன் மூலம், அவர் ஆழமாகப் புரிந்துகொள்வார்.இப்போது உங்கள் சீஷ்யன் தனது சொந்த மொழியில் அனைத்தாயும் வைத்திருப்பதால்,தான் கற்றுக்கொண்டவற்றை ஆங்கிலம் பேசத் தெரியாத தனது நண்பர்களுடன் எளிதாகப் பகிர்ந்து கொள்ளலாம்.
கூடுதலாக நீங்கள் வெவ்வேறு மொழிகளில் தகவல் ஐக் காணலாம்:எந்தப் பரிசுத்த வேதாகமத்தின் மொழிபெயர்ப்பைப் படிப்பது எளிதானது,அதை நான் எங்கே பெற முடியும்?நீங்கள் ஒரு குறிப்பிட்ட மொழியில் ஒருவரைப் பயிற்றுவிக்க விரும்பினால் இதை ஒரு ஆரம்ப நிலையாகப் பயன்படுத்தவும்.
ஒரு பயிற்சியாளரைக் கண்டுபிடி
நல்ல உள்ளடக்கங்களும் பணித்தாள்களும் நல்ல சீடத்துவத்திற்கு,ஒரு பாதி மட்டுமே.மற்றப் பாதி: நீங்கள் பயிற்சியாளராக! ஒரு நல்ல பயிற்சியாளராக மாறுவதற்கான சிறந்த வழி, உங்களைச் சீடராக்கும் ஒரு நல்ல பயிற்சியாளரை நீங்கள் வைத்திருப்பதுதான். ஒருவரை எங்கே கண்டுபிடிப்பதென்று உங்களுக்குத் தெரியாவிட்டால்: தொடர்பு எங்களைத் தொடர்பு கொள்ளவும்! எப்படித் தொடங்குவது,எந்தெந்த ஆதாரங்களை எப்போது பயன்படுத்தவேண்டும் மற்றும் குறிப்பிட்ட கலாச்சாரங்கள் மற்றும் மொழிகளில் சீடத்துவத்தைப் பற்றிய ஆலோசனைப் பெற நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இந்த இணையவலைத்தளம் =
இந்த இணையவலைத்தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது: இந்த இணையவலைத்தளத்தில் எவ்வாறு திறம்படச் செயல்படுவது மற்றும் பல்வேறு மொழி அமைப்புக்களைப் பயன்படுத்துவது என்பன பற்றிய விவரங்களுக்கு இங்கே படிக்கவும்.
பங்களிப்பு
தற்போது எங்களிடம் 47 வெவ்வேறு மொழிகளில் பணித்தாள்கள் உள்ளன. இணையவலைத்தளம் மற்றும் பணித்தாள்களின் ஒவ்வொன்றின் தரத்தையும் மேம்படுத்துவதிலும்,மேலும் பல மொழிகளில் மொழிபெயர்ப்புகளை வழங்குவதிலும்,புதிய ஆதாரங்களைச் சேர்ப்பதிலும் நாங்கள் எப்போதும் பணியாற்றி வருகிறோம். எங்களோடு இணைந்து பணியாற்ற உங்களையும் வரவேற்கிறோம்!