எதிர்மறையான பரம்பரைச் சொத்துக்களை(ஆஸ்திகள்) மேற்கொள்ளுதல்
இந்த உலகில் நாம் நமது முன்னோர்களிடமிருந்து பரம்பரைச் சொத்துக்களைப் பெறலாம்,சாதகமானவை (உதாரணம்:செல்வம்,
திரவியங்கள்)அல்லது பாதகமானவை (கடன்கள்).நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைகளும் தீர்மானங்களும் நம் வாழ்க்கை முறைகளிலும் தொடர்ந்து,செல்வாக்கு செலுத்துவதைக் காண்கிறோம்.
அதே வழியில்,நம் முன்னோர்களிடமிருந்து ஒரு ஆன்மீகப் பரம்பரைச் சொத்துக்களைப் (ஆஸ்தி)பெறுகிறோம்,அதில் சாதகமான பக்கமும் (ஆசீர்வாதங்களும்) பாதகமான பக்கமும் (சாபங்களும்) இருக்கலாம். பெரும்பாலும் நமது ஆன்மீகப் பரம்பரை ஆஸ்திகளை (சொத்துக்கள்)உருவாக்கும் அனைத்து விஷயங்களும் நமக்குத் தெரியாது.7 ஆனால்,உண்மையில் நாம் அதைப் பெற்றுள்ளோம்,அது நம்மைப் பாதிக்கிறது. அதிர்ஷ்டவசமாக,அதைத் கைவிடுவதன் மூலம் பாதகமானயான பரம்பரை ஆஸ்தியின் அனைத்துத் தாக்கங்களிலிருந்தும் விடுபடுவதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது. இது தானாக நடக்காது - இதற்கு நமது உணர்வு விழிப்பு அடைவதற்கான தீர்மானம் தேவைப்படுகிறது.
நற் செய்தி என்னவென்றால்: நாங்கள் எங்கள் மூதாதையர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை, ஆனால் அவர்களிடமிருந்து நாம் எதைப் பெறுகிறோம் என்பதை முடிவு செய்து தொடரலாம்.
தலைமுறை தலைமுறையாக பாவத்தின் விளைவு
குடும்பங்களைக் கவனிக்கும்போது,பாவத்தின் மாதிரிகள் இருப்பதைக் காணலாம்.ஒரு மனிதன் கோபத்தால் கஷ்டப்பட்டால், அவனது தந்தையும் தாத்தாவும் அப்படிச் செய்திருக்கலாம்.ஒரு நபர் மட்டுமல்ல,ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு:
- சூசன் கல்வியில் வெற்றி பெற்ற குடும்பத்தில் இருந்து வந்தவள்.அவளின் பெற்றோர்,தங்கள் பொற்றோரால் உத்வேகப்படுத்தியதைப் போல,அவளுடைய பெற்றோர் எப்போதும் அவளைச் சிறந்தவளாக்க உத்வேகப்படுத்துகிறார்கள். வெற்றியின் மூலம் தன் சுய மதிப்பை மட்டும் வரையறுக்கும் முறையை அவள் கற்றுக்கொண்டாள். அவள், தான் தவறு செய்யாவிட்டால் மட்டுமே கர்த்தர் தன்னை ஏற்றுக்கொள்வார் என்று அவள் நம்புகிறாள்.முந்தைய தலைமுறைகளைப் போலவே, தன்னை எப்படி நேசிக்க வேண்டும் அல்லது மற்றவர்களை எந்த நிபந்தனைகளுமின்றி ஏற்றுக்கொள்வது எப்படி என்பதை அவள் ஒருபோதும் கற்றுக் கொள்ளவில்லை. அவள் தொடர்ந்து தனிமையிலும் தோல்வியின் பயத்திலும் வாழ்கிறாள்.
யாரோ ஒருவர் முன்வந்து அதை தீவிரமாக நிறுத்தும் வரை பாவம் பெரும்பாலும் தலைமுறை தலைமுறையாகவே தொடரும்.இந்த பாவத்தை மன்னிப்பதன் மூலமும், விட்டு விலகுவதன் மூலமும், இந்த பாதகமான பரம்பரை ஆஸ்தியிலிருந்து நாம் விடுபடலாம்.முன்னர், கர்த்தரின் ஆசீர்வாதம் திருடப்பட்டது.ஆனால் இப்போது,கர்த்தரின் நல்ல நோக்கங்கள் நம் வாழ்விலும் நம் சந்ததியினரின் வாழ்க்கையிலும் தோன்றலாம். உதாரணத்திற்கு:
- கரோல் திருமணம் செய்து கொள்ளவிருந்தபோது,தனது வருங்காலக் கணவன் தன்னை விவாகரத்துச் செய்து விடுவானென்று அவள் தொடர்ந்து பயப்படுவதை அவள் உணர்ந்தாள். ஜெபத்தில்,அவளுடைய குடும்பத்தில் ஆண்கள் பெண்களை விவாகரத்து செய்து இருப்பதைக் கர்த்தர் அவளுக்குக் காட்டினார். அவளது தாத்தா உணர்ச்சிவசப்பட்டு பாட்டியிடம் இருந்து விலகிவிட்டார்,அவளுடைய தந்தை அவளது தாயை விவாகரத்துச் செய்தார், இதன் விளைவாக "ஆண்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல" என்ற பொய்யான மாயையை ஏற்படுத்தியது.அந்த எதிர்மறையான பரம்பரை ஆஸ்தியுடன் தொடர்புடைய அனைத்தையும் மன்னித்து, விலகிய பிறகு,அவள் இந்த பயங்களிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சி நிறைந்தவளானாள்.
இயேசு கிறிஸ்து நமக்கு ஒரு புதிய பரம்பரை ஆஸ்தியைத் தருகிறார்
கர்த்தருடைய குடும்பத்தில் தத்தெடுக்கப்படுவதற்கும், அவருடைய பிள்ளைகளாக மாறுவதற்கும் தேவன் நமக்கு வாய்ப்பளிக்கிறார் (யோவான் 1:12-13). இது இயேசு கிறிஸ்துவால் மட்டுமே சாத்தியமாகும் (“கடவுளின் கதை” பார்க்கவும்).நாம் அவருடைய வாய்ப்பை ஏற்று மீண்டும் பிறக்கும்போது, இயேசு கிறிஸ்து நமக்கு ஒரு புதிய சுதந்தரத்தைத் தருகிறார் (ரோமர் 8:17). மேலும் அவர் மூலம் நாம் நம் முன்னோர்களிடமிருந்து பெற்ற பரம்பரைச் சொத்துக்களின் எதிர்மறையான தாக்கங்களில் இருந்தும் விடுபடலாம்.
ஆரம்பத்தில்,நமது ஈடுபாட்டு உணர்வில்லாது இல்லாமையால் எங்கள் எதிர்மறையான பரம்பரைச் சொத்தைப் பெற்றோம்.ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில்,அந்த பரம்பரைச் சொத்தின் பாவங்களுடனும், அடிப்படையான பொய்களுடனும் நாம் - உணர்வுபூர்வமாகவோ அல்லது அறியாமலோ - கூட்டாளியாக ஆரம்பித்தோம்.ஆகவே, நம் முன்னோர்கள் செய்தது போல் நாமும் அந்தப் பாவத்தில் குற்றவாளியாகி விட்டோம்.உண்மையில் விடுதலை பெற,நாம் இந்த பாவத்தை கர்த்தரிடம் அறிக்கையிட்டு மனந்திரும்ப வேண்டும் - அதை நிராகரித்து அதிலிருந்து வெளியேற வேண்டும். நாம் பொதுவாக ஜெபிக்கலாம் மற்றும் நம்முடைய பரம்பரை இயேசு கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படட்டும்; ஆனால்,எந்தெந்தப் பகுதிகளில் நாம் ஏற்கனவே பாவங்களை நம் வாழ்வில் ஒருங்கிணைத்துள்ளோம், அவற்றைத் தொடர்ந்தும் செய்து வருகிறோம் என்பது நமக்குத் தெரியாவிட்டால், பெரிய மாற்றங்களைக் காண முடியாது.அதனால்தான், நம்முடைய பரம்பரையிலுள்ள ஆரோக்கியமற்ற பகுதிகள் என்ன என்பதை இயேசு கிறிஸ்து நமக்குக் காண்பிப்பது முக்கியம். நாம் ஏற்கனவே நம் முன்னோர்களின் பாவங்களைச் செய்துகொண்டிருந்தால், ஆரோக்கியமற்ற பரம்பரைச் சொத்துக்களை எளிதாக மறுப்பது மட்டும் போதாது. தனிப்பட்ட முறையிலும் அதிலிருந்து நாம் மனந்திரும்ப வேண்டும்.
விண்ணப்பம்
இதை நாம் சுயமாகக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. கர்த்தருடனான உரையாடலில்,நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் படிப்படியாகக் காட்டுவார்.நமது ஆன்மீக பரம்பரைச் சொத்தின் எதிர்மறையான அம்சங்களை சுத்தம் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் செய்தால்,அவைகள் இனி நம் மீது அதிகாரம் செலுத்த மாட்டாது.
ஒரு நல்ல உதவியாளரின் ஆதரவைப் பயன்படுத்துங்கள்!இதைச் செய்வதில் நீங்கள் அழுத்தத்தையோ அல்லது ஏதாவது சங்கடத்தையோ உணர்ந்தால்,தயவு செய்து சொல்லுங்கள்! நீங்கள் கர்த்தருடன் உரையாடலில் ஈடுபடத் தயாராக இருந்தால், இப்படித் தொடங்கலாம்:
கர்த்தாவே,நான்,என் முன்னோர்களிடமிருந்து பரம்பரையாகப் பெற்ற ஒரு பிரச்சனை என் வாழ்க்கையில் இருக்கிறதா?
- கர்த்தர் உங்களுக்கு பிரச்சனையை காட்டட்டும். இந்தப் பாவம் உங்கள் குடும்பத்தில் எப்போது, எப்படி நுழைந்தது என்பதற்கான கூடுதலான விவரங்களையும் அவர் காட்டலாம்.
குடும்பத்தினர் செய்த பாவத்தை மன்னிக்கவும், அதனுடன் கூட்டு சேர்ந்து சாத்தானுக்கானக் கதவைத் திறந்ததற்காகவும் (பணித்தாள் “படிப்படியாக மன்னித்தல்” விவரங்களுக்கு).
பரிசுத்த ஆவியானவரே, இந்தப் பாவத்தில் நான் எங்கே பங்குகொண்டேன்?
- உங்கள் பாவத்தையும் உங்கள் குடும்பத்தின் பாவங்களையும் கர்த்தரிடம் அறிக்கையிட்டு, மனந்திரும்பி,கர்த்தரிடம் மன்னிப்புக் கேளுங்கள் (விவரங்களுக்கு “பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்புதல்” என்ற பணித்தாள் பார்க்கவும்).
இயேசுகிறிஸ்துவே,உமது பெயரால் நான் உமக்குச் சொந்தமில்லாத என் பரம்பரைச் சொத்தின் பகுதியை நிராகரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவே,தயவு செய்து உமது இரத்தத்தில் எனது பரம்பரைச் சொத்துக்களைச் சுத்தப்படுத்துங்கள்.
- இந்த பாவத்தின் மூலம் உங்கள் வாழ்க்கையில் ஒரு பொய் வந்ததா என்று கர்த்தரிடம் கேளுங்கள். அப்படியானால்,இந்தப் பொய்யை நிராகரித்து, இயேசு கிறிஸ்து உங்களுக்கு உண்மையைக் காட்டட்டும்.
- இந்த பாவத்தின் மூலம் உங்களிடமிருந்தும் உங்கள் குடும்பத்தினரிடமிருந்தும் ஏதாவது திருடப்பட்டதா என்று நீங்கள் கர்த்தரிடம் கேட்கலாம்.ஆம் என்றால், அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்,கர்த்தரிடம் அவருடைய ஆசீர்வாதத்தையும் கேளுங்கள்,மேலும் உங்கள் குடும்பத்திற்காகவும் ஜெபம் செய்யுங்கள்.
- தேவைப்பட்டால்,நீங்கள் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவிடம் கேளுங்கள். அவர் வேறொரு பிரச்சனையைக் காட்டினால், பயன்பாட்டு வழிகாட்டியை மீண்டும் தொடக்கத்தில் இருந்து தொடங்கவும்