ஜெபத்தில் ஒரு உதவியாளரின் பங்கு
கர்த்தரோடு பேசுவதில் மற்றவர்களை வழிநடத்துதல்
நாம் வேதனைப்படும்போது அல்லது நம் கடந்த காலப் பாவச் சுமைகளை நம்முடன் சுமக்கும்போது, இது கர்த்தருடனான நமது உறவைப் பாதிக்கிறது. இந்த விஷயங்கள் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை நாம் அடிக்கடி அறிந்திருப்பதில்லை - நாம் சில சமயங்களில் அதில் மாட்டிக் கொள்கிறோம்,நம் எண்ணங்கள் பெரும்பாலும் எதிர்மறையானவை,அல்லது நாம் மீண்டும் மீண்டும் அதே பாவத்தில் விழுவதை மட்டுமே உணர்கிறோம்.எங்கள் பிரச்சனையின் மூலத்தைப் பெற,சரியான அனுபவமும் தெளிவான "வெளியே" கண்ணோட்டமும் உள்ள ஒருவரின் ஆதரவைப் பெறுவது மிகவும் உதவியாக இருக்கும். நாம் கடவுளிடம் சரியான கேள்விகளைக் கேட்கவும்,அவற்றிலிருந்து விடுதலை பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அவை நம்மை வழிநடத்தும்.
நாமே நம் வாழ்க்கையைச் சுத்திகரித்துக் கொண்டு, வேறொருவரின் உதவியால் விடுதலையை அனுபவிக்கும்போது,அடுத்த கட்டமாக,மற்றவர்களையும் கர்த்தருடன் உரையாடலில் வழிநடத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதோடு, மற்றவர்களும் விடுதலையாக உதவலாம்!
கர்த்தர் மக்களை சுகப்படுத்தி விடுவிக்க விரும்புகிறார்.ஒரு உதவியாளராக,மற்ற நபரை கர்த்தரைச் சந்திப்பதற்கு வழிநடத்துவது அவரது பொறுப்பாகும்,இதனால் இது சாத்தியமாகும்.இதில் பரிசுத்த ஆவியானவருக்கு முக்கிய பங்கு உள்ளது - அவருடைய வழியைப் பின்பற்றுவதன் மூலம் நாம் அவருடன் நண்பராகிறோம். அதாவது நாம் பரிசுத்த ஆவியானவருக்கு செவிசாய்த்து,அவருடன் முடிந்தவரை தொடர்பு கொள்ள மற்றவருக்கு உதவுகிறோம்.அவர்கள் கர்த்தரிடம் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு ஆலோசனை கொடுப்பதன் மூலம் இதைச் செய்கிறோம். மேலும் பின்வரும் இரண்டு பகுதிகளில் நாங்கள் அவர்களுக்கு உதவலாம்:
- பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு வெளிப்படுத்த விரும்புவதை உணர்ந்துதல்
- பரிசுத்த ஆவியானவர் காட்டிய முறைகளைக் கைக்கொள்ள அவர்களுக்கு வழிகாட்டுதல்
கர்த்தருடனான உறவு முக்கியமானது
தேவன்(கர்த்தர்) | ||
நீங்கள் (உதவியாளர்) | மற்ற நபர் |
ஒவ்வொரு ஜெப நேரத்தின் முக்கிய நோக்கம்,மற்ற நபருக்கும் கர்த்தருக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதாகும். அதனால் தான் வரைபடத்தில் இது மிக முக்கியமானதாகக் காட்டப்பட்டுள்ளது.கர்த்தர் அவர்களுடன் பேச விரும்புகிறார் என்றும், அவர்கள் கர்த்தரின் குரலைக் கேட்க முடியும் என்றும் நாங்கள் எப்போதும் நம்புகிறோம்.அவருடன் சேர்ந்து தடைகளை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதில் அவர்களை வழிநடத்துகிறோம்.
இதற்காக,கர்த்தருடனான நமது சொந்த உறவு சரியானது மற்றும் ஒரு உதவியாளராகவும், ஜெபம் செய்யும் நேரம் முழுவதும் கர்த்தருடன் தொடர்ச்சியாக இணைந்து இருப்பதும் அவசியம். இந்த வழியில், நாம் கர்த்தருடன் நெருங்கி இணைந்து,முடிந்தவரை வேலை செய்யலாம் மற்றும் மற்ற நபர் விடுதலையாக வழிநடத்தலாம்.
நாம் உதவி செய்யும் நபருடனான நமது உறவில், அவர்கள் நம்மை நம்புவதும், அவர்களை வழிநடத்துவதும் முக்கியம்.ஆனால் இந்த உறவில் முக்கிய கவனம், ஜெப நேரத்திற்குள்ளானதாக மட்டும் இருக்கக்கூடாது.நாம் இணைந்து ஜெபம் செய்யும் நேரத்தில்,ஒருவரோடு ஒருவர் நாம் குறைவாக பேசுகிறோம் என்பதே இதன் பொருள். மாறாக,பிரச்சினைகளைப் பற்றி கர்த்தரிடம் பேசவும் மற்றும் கர்த்தரிடம் சரியான கேள்விகளைக் கேட்கவும் அனுமதிக்கிறோம்.அவர் அடிவேர்களை(மூலத்தை) அறிந்தவர் மற்றும் குணப்படுத்துபவரும் விடுதலையைத் தருபவரும் அவரே.
உதவியாளன் என்ற நிலைக்கு நான் தயாரா?
நீங்கள் இன்னும் உங்களைக் கட்டியெழுப்பினால், மற்றவர்களை விடுதலைபெற குறைவாகவே உங்களால் வழி நடத்த முடியும். இந்த பொறுப்பை ஏற்க பின்வருவன அவசியம்
- மீண்டும் பிறந்து, அனுபவம் வாய்ந்த ஆத்மா(உள்மனம்)
குணமடைதலும்,உங்கள் வாழ்க்கை முறையும் நீங்கள் இயேசுவைப் போல் தொடர்ந்து வருகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது
- மனத்தாழ்மை,மக்கள் சொல்வதை பொறுமையோடும், அன்போடும் கேட்டு அப்படியே ஏற்றுக்கொள்வது
- நம்பக்கூடியதும் இரகசியமானதும்
இந்த மூன்று அளவுகோல்(அளவுகோலகள்)
களின்படி உங்களை நீங்களே சோதித்துப் பார்த்து, கர்த்தருடன் பேசுங்கள்: இந்தப் பொறுப்பிற்கு (பாத்திரத்திற்கு) நீங்கள் எவ்வளவு தயாராக இருக்கிறீர்கள்?
உங்கள் வழிகாட்டி / பயிற்சியாளருடன் மற்றும் அனுபவம் வாய்ந்த உதவியாளருடன் பேசுங்கள்: அவர்களின் அபிப்பிராயத்தை அவர்களிடம் கேளுங்கள் மற்றும் உதவியாளரின் பங்கைக் கற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருப்பதாக அவர்கள் பார்க்கிறார்களா!
ஜெப(பிரார்த்தனை)நேரத்திற்கான கொள்கைகள் (கோட்பாடுகள்)
- கர்த்தரைச் சார்ந்திருங்கள்
- நம் சொந்த பலத்தால் மற்றவரிடம் எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியாது.ஆகையால்,பரிசுத்த ஆவியானவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பதைக் கண்டுபிடிப்பதை நாங்கள் எப்போதும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். கர்த்தர் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்க்கலாம்!
- அறிவுரை-ஆலோசனை இல்லை
- ஒரு ஜெப(பிரார்த்தனை) நேரத்தில்,அறிவுரை வழங்க வேண்டாம்,ஆனால் அவர்களே கர்த்தரின் வழிகாட்டுதலைப் பெற சரியான கேள்விகளைக் கேட்கட்டும்.அவர்களுக்குத் தேவை உங்கள் ஞானம் அல்ல, ஆனால் கர்த்தர் சொல்வதைக் கண்டுபிடிக்க அவருடன் உறவு கொள்ள வேண்டும்.
- நம்பிக்கை கொடுங்கள்
- முன்னரை விட நம்மைச் சந்தித்த பிறகு,மக்கள் சிறந்த நிலையில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
- இரகசியத்தன்மை(அந்தரங்கம்)
- நடந்த எதையும் நாங்கள் பகிர்ந்து கொள்வதில்லை. உங்கள் கற்றல் அல்லது உதவிக்கு இது அவசியமானால், உங்கள் வழிகாட்டி/பயிற்சியாளருடன் நீங்கள் அநாமதேயமாக விவாதிக்கலாம். இதற்கு அனுமதி கேட்டால் நல்லது
மற்றவர்களைக் கௌரவித்தல்
மற்றொரு நபர் கர்த்தரின் பார்வையில் விலையேறப்பெற்றவரும் மதிப்புமிக்கவருமாவார். அப்படித்தான் அவர்களைச் கையாள விரும்புகிறோம்!
- நாம் ஒருபோதும் மற்ற நபரை எதையும் செய்யும்படி கட்டாயப்படுத்த மாட்டோம், அவசரப்படவோ அல்லது விரைவாகச் செய்விக்கவோ மாட்டோம். அவர்கள் ஆயத்தம்இல்லை அல்லது முன்னேறிச் செல்ல விரும்பவில்லை என்றால், நாங்கள் அதை செய்யவும் மாட்டோம்.
- மற்ற நபரை ஊக்குவிக்கவும், ஒருபோதும் தீர்ப்பளிக்கவும் வேண்டாம். எளிதான சூழ்நிலையை உருவாக்குங்கள், இதனால் அவர்கள் கர்த்தருடன் முற்றிலும் நேர்மையாக இருக்க முடியும் மற்றும் மோசமாக உணர மாட்டார்கள் (உதாரணமாக:அவர்கள் எதையும் கேட்கவில்லை என்றால் அல்லது அவர்கள் பாவம் செய்தால்).
- அவர்கள் தங்கள் சொந்த உணர்வுகளையும் சூழ்நிலையில் முன்னோக்கையும் கொண்டுள்ளனர்,அதைத் தான் கர்த்தர் குறிப்பிடவும் குணப்படுத்தவும் விரும்புகிறார்.உங்கள் கருத்தை கொண்டு வராதீர்கள் அல்லது அவர்களின் தர்க்கத்தைக் கேள்வியும் கேட்காதீர்கள்
- அவர்கள் பயன்படுத்தும் மொழியை(பாஷையை)நாமும் பயன்படுத்துகிறோம்.கர்த்தர் அவர்களுக்கு ஒரு உண்மையை வெளிப்படுத்தும் போது, அவர்கள் சொல்வதைப் போலவே அதைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்,அதைக்கு மறுமொழி சொல்லாதீர்கள்.
நல்ல உதவியாளராக வர வழி
எல்லா விஷயங்களையும் போலவே,இயேசு கிறிஸ்து நமக்கு முன்மாதிரியாவார். அவர் தம்முடைய சீஷர்களுக்கு முதலில் தானே ஏதாவது செய்து அவர்களைக் கவனிக்க அனுமதித்தார்.பின்னர் அவர் அருகில் நின்றுகொண்டே அவற்றை அவர்கள் முயற்சி செய்யஅனுமதித்தார். பின்னர்,அவர் அவர்கள் பக்கத்தில் இல்லை,ஆனால் அவற்றை அவர்களுடன் மதிப்பீடு செய்தார். கடைசியாக,அவர்களை அவற்றைத் தானாகவே செய்ய வெளியிலே அனுப்பினார்.
உங்களை வேறொருவர் வழிநடத்தும்வேளை, முதற்படியாக நீங்கள் எப்பொழுதும் உங்களுக்காக ஒரு ஜெபநேரத்தை கொண்டிருக்க வேண்டும்.பிறகு உங்களுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய அனுபவமிக்க ஒரு உதவியாளரைத் தேடுங்கள்.பயிற்சி பெறுபவராக நீங்கள் பல ஜெபங்களை உற்று நோக்குவது ஒருநல்லஅடுத்தபடியாகும். அதன் பிறகு நீங்கள் ஒரு துணைத் தலைவர் பதவியை ஏற்கலாம்.இறுதியாக நீங்கள் ஒரு ஜெபத்தை(பிரார்த்தனை நேரத்தை)வழி நடத்த முடியும். உங்கள் பயிற்சியாளரை இணைத் தலைவராக இருக்கும்படி நீங்கள் கேட்கலாம்,இதனால் அவர் உங்களுக்குகத் தன் கருத்துத்(,நீங்கள் செய்வதிலுள்ள நிறை குறைகளைப்பற்றி) தெரிவிக்க முடியும்.
எனது அடுத்த படிகள்(வழிகள்)
கர்த்தரிடம் கேளுங்கள்: என் ஆத்மாவைக் குணப்படுத்துவதில் எனக்கு இன்னும் என்ன பிரச்சினைகள் உள்ளன?
மக்களை விடுதலையாக்கவும் குணப்படுத்தவும் வழிநடத்த அது பல அடிப்படைக் கொள்கைகளையும் மற்றும் செயல்முறைகளையும் அடிப்படையாகக் கொண்டது. அவை துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு பணித்தாள்களில் விளக்கப்பட்டுள்ளன: “படிப்படியாக மன்னித்தல்”, “பாவங்களைஅறிக்கையிட்டு மனந்திரும்புதல்”, “பயமத்தையும் கோபத்தையும் மேற்கொள்வது” போன்றவை. ஒவ்வொரு பகுதியையும் நீங்கள் வசதியாக இருக்கும் வரை கற்றுக்கொள்வது முக்கியம்,பின்னர் அவற்றை எல்லாம் ஒன்றாக இணைக்கப் பயிற்சி செய்யலாம். உங்கள் சொந்த வாழ்க்கையிலும் மற்றவர்களின் வாழ்க்கையிலும் இந்த தனிப்பட்ட கொள்கைகளில் நீங்கள் எவ்வளவு அனுபவம் பெற்றிருக்கிறீர்கள்?
"ஒரு ஜெப(பிரார்த்தனை) நேரத்திற்கான கோட்பாடுகள்" மற்றும்"மற்றவர்களை மதிப்பது" என்ற பந்திகளைப் படிக்கவும்.
எந்த விடயங்கள் உங்களுக்கு குறிப்பாக சவாலாக உள்ளன? உங்கள் பயிற்சியாளரின் முன்னோக்கைக்(முழு உளக்காட்சி) கேட்டு ஒன்றாகப் பேசுங்கள்:இந்த பகுதிகளில் நீங்கள் எவ்வாறு வளரலாம்?
உங்கள் பயிற்சியாளருடன் இருந்து உங்களுக்கான பயிற்சித் திட்டத்தை உருவாக்குங்கள்