Version: 1.2

கர்த்தருடன் நேரம்

நாம் ஒருவரை அறிய விரும்பினால்,அவருடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள வேண்டும்.கர்த்தருடனான நமது உறவிலும் இதுவே உள்ளது:அவரை நன்கு தெரிந்துகொள்ள,அவருடன் நேரத்தை செலவிட வேண்டும்.

நாம் கர்த்தருடன் உள்ள நேரத்தின் நோக்கம்

  • கர்த்தரை வழிபடுவதற்கு: கர்த்தர் நம் துதிக்கும் தகுதியானவர் மற்றும் நம் நேரத்திற்கும் தகுதியானவர்.
  • கர்த்தருடன் உரையாடுவதற்கு: ஜெபத்திலே,நமது இருதயத்தில் உள்ளவற்றை அவருடன் பகிர்ந்து கொள்கிறோம்.அவர் நம்மோடு பேசுவதற்கும் நம்மை வழிநடத்துவதற்கும் நாம் அவருக்குச் செவிசாய்க்கிறோம்.
  • கர்த்தரிடமிருந்து கற்றுக்கொள்ள:கர்த்தர் தம் வார்த்தை,பரிசுத்த வேதாகமம் மற்றும் அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் நமக்குக் கற்பிக்க விரும்புகிறார்.நாம் வளர இவை நமக்கு ஆன்மீக உணவு போன்றது.

பரிசுத்த வேதாகமத்திலிருந்து உதாரணங்கள்

பின்வரும் பரிசுத்த வேதாகம வசனங்களைப் பார்த்து அட்டவணையை நிரப்பவும்: இது யாரைப் பற்றிப் பேசுகிறது?இந்த நபர் எப்போது,எங்கே,எப்படி சரியாகக் கர்த்தருடன் நேரத்தை செலவிடுகிறார்?

வசனம் நபர் நேரம் இடம் சரியாக என்ன?
சங்கீதம் 5:3 தாவீது காலைப் பொழுதில் ? ஜெபம் செய்து,பதிலுக்காக காத்திருத்தல்
தானியேல் 6:11
மாற்கு 1:35
லூக்கா 6:12
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:9
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:25

கர்த்தருடனான நமது நேரத்திற்கான கருவிகளும் மற்றும் பரிந்துரைகளும்

  • பரிசுத்த வேதாகமம்: பரிசுத்த வேதாகமத்திலிருந்து ஒரு பந்தியைப் படித்து, அதைப் பற்றி சிந்தித்து ஜெபிக்கவும்.இதற்கு நீங்கள் தலை-இருதயம்-கை கேள்விகளைப் பயன்படுத்தலாம்:
    Head-32.pngதலை:நான் இதிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறேன்?
    Heart-32.pngஇருதயம்:என் இருதயத்தைத் தொடுவது எது?
    Hands-32.pngகைகள்: இதை நான் எப்படிப் பயன்படுத்துவது?
  • இடம்:கவனச்சிதறல் இல்லாமல் கர்த்தரைச் சந்திக்கும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • நேரம்:

நீங்கள் தொடர்ந்து கர்த்தரைச் சந்திக்கக்கூடிய சிறந்த நேரத்தைக் கண்டறியவும்.

  • திட்டம்: படிக்க ஒரு வேதாகமப் புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கவும். ஆரம்பத்திற்கு,லூக்கா மற்றும் அப்போஸ்தலர் நடபடிகைகளைப் படிக்கவும் (புதிய ஏற்பாட்டில்)
  • குறிப்புகளைஉருவாக்குவதும் பகிர்தலும்:உங்கள் எண்ணங்கள்,கர்த்தர் உங்களுக்கு என்ன சொல்கிறார் என்று நீங்கள் உணர்கிறீர்கள்,உங்கள் கேள்விகள்,உங்கள் அல்லது உங்கள் நண்பர்களின் ஜெப விண்ணப்பங்கள்,கர்த்தர் எவ்வாறு ஜெபத்திற்குப் பதிலளித்தார், ஊக்கமளிக்கும் வசனங்களை எழுதுங்கள் அல்லது உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ,…

கர்த்தருடனான எனது நேரத்திற்கான எனது அர்ப்பணிப்பு

நேரம்:


இடம்:


திட்டம்: