Version: 1.0

பயிற்சிக் கூட்டத்திற்கான சிறிய குறிப்புக்கள்

உங்கள் குழுவை தொடர்ச்சியாக வாரந்தோறும் அல்லது இரு வாரத்திற்கு ஒருமுறை சந்திப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு கூட்டத்தையும் ஒழுங்கு செய்வதற்கு நேரம் ஒதுக்குங்கள்.ஒவ்வொரு நபருக்காகவும் ஜெபித்து, அடுத்த குழுக் கூட்டத்தைப் பற்றி கர்த்தர் உங்களிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைக் கேளுங்கள்.


மூன்று-மூன்றில் ஒன்று படிநிலை வரைபடம் இதை நடுவில் வைத்திருப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும்,எனவே நீங்கள் அதைப் பின்பற்றலாம். மூன்று மிக முக்கியமான கட்டளைகள்இதன் வழியாகச் சென்று இதை ஏன் செய்கிறீர்கள் என்பதை விளக்குங்கள். ஒரு பயிற்சி கூட்டத்திற்கு சுமார் இரண்டு மணிநேரம் திட்டமிடுவது நல்லது, பின்வரும் நேர இடைவெளிகள் மொத்த நேரத்தின் இரண்டு மணிநேரத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் தேவைப்பட்டால் நீங்கள் அதை குறைந்த நேரத்திலும் செய்யலாம்,அல்லது இதைத் தவிர்க்கலாம்.தடித்த(முக்கியமான) பாகங்கள்.எந்த வகையில் நேரத்தைப் பயன்படுத்துதென்பது முக்கியம்,இதனால் ஒவ்வொரு பகுதிக்கும் உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும்,மேலும் மூன்று பகுதியிலும் மேலும் மூன்றில் ஒரு பங்கு நேரம் கிடைக்கும்.

மூன்றில் முதலாவது: அன்பான மக்கள்

பகிர்தல்,மதிப்பீடு, பிரச்சனைகளைத் தீர்ப்பது மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்தல் (சுமார் 40 நிமிடங்கள்)

15 நிமிடங்கள்

1.உங்கள் சுகம் எப்படி? (நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?) (ஆயர்(போதகர்)பராமரிப்பு): ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் என்ன நடக்கிறது என்பதைக் கேட்க நேரம் ஒதுக்குங்கள். யாராவது குறிப்பிட்ட தேவைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது,​​இந்த விடயத்திற்கு நடைமுறையில் எவ்வாறு உதவுவது மற்றும் அவர்களுக்காக ஜெபம் செய்வது என்பதைத் திட்டமிடச் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

15 நிமிடங்கள்

2. பொறுப்புக்கூறல் ஒவ்வொருவரும் கடந்த முறை நிர்ணயித்த இலக்குகளை அவர்கள் எவ்வளவு சிறப்பாக அடைந்தார்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லுங்கள்.இதற்குப் பதிலாக மத்தேயு 4:19 ஐ அடிப்படையாகக் கொண்ட பின்வரும் இரண்டு கேள்விகளையும் நீங்கள் கேட்கலாம்
மீன்பிடித்தல்: கடந்த வாரம் கடவுளைப் பற்றி மற்றவர்களுடன் எவ்வாறு பகிர்ந்து கொண்டீர்கள்?
பின்தொடர்வது: கடந்த வாரம் கர்த்தர் உங்களுக்குக் கற்பித்ததை நீங்கள் எவ்வாறு பின்பற்றுகிறீர்கள்?

யாரோ ஒருவர் தனது கர்த்தரின் கதையை வேறொருவருடன் பகிர்ந்து கொள்ளும்போது,​​அது எவ்வாறு சொல்லப்பட்டது என்று கேளுங்கள்.உங்கள் குழுவில் வேறொரு குழுவை வழிநடத்தும் நபர்களுக்கு, அவர்களின் குழுக்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் அவ்வப்போது அவர்களிடம் கேளுங்கள், மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவர்களுக்கு ஆதரவளியுங்கள். தலைவராகப் பதவி வகிக்கும் நீங்கள்,எல்லோரையும் போலவே உங்கள் இலக்குகளை எவ்வாறு செய்தீர்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.ஒரு திறந்த மற்றும் ஊக்கமளிக்கும் சூழ்நிலையை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்,அங்கு ஒவ்வொருவரும் அவரது வெற்றிகளையும் தோல்விகளையும் நேர்மையாக பகிர்ந்து கொள்ள முடியும்.

10 நிமிடங்கள்

3.நோக்கம்(எதிர்கால வளர்ச்சியின் தொலை நோக்குப் பார்வை) எதிர்கால நோக்கம் என்பது கர்த்தருக்குச் சாத்தியமானதையும் அவர் ஒவ்வொருவரிடமும் காணும் திறனையும் சித்தரிப்பதாகும். இது அவர்கள் கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்துவதற்கு அவர்களை ஊக்குவிப்பதோடு,பயிற்சி செயல்முறைக்கான ஊக்கத்தையும் வழிகாட்டுதலையும் வழங்குவதாகும். உருவகமாகச் சொல்வதானால்,நம் கண்களின் கவனம் விரைவாக நம் கால்களுக்கும்,நமக்கு முன்னால் உள்ள அழுக்கு மற்றும் கற்களுக்கும் நகரும். கர்த்தரின் கண்ணோட்டத்தில் கவனம் செலுத்தி,நமது அடுத்த படிகள் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிவிக்கவும்.
நீங்கள் பிறரிடமிருந்து பெற்ற அவர்களின் எதிர்கால நோக்கம் பற்றிய சிறிய குறிப்புக்களைப பயன்படுத்தலாம் அல்லது குறிப்பிட்ட குழுவிற்கு உங்கள் தனிப்பட்ட எண்ணங்களைப் பகிரலாம்.முடிந்தால், ஆக்கப்பூர்வமாக இருக்கவும்,ஊடகங்கள் அல்லது பிற வழிகளைப் பயன்படுத்துவதால் உங்கள் கருத்துக்களை மற்றவர்களால் நினைவுபடுத்தவும் முடியும்.

மூன்றில் இரண்டாவது: அன்பான கர்த்தர்

கர்த்தருடனான நமது உறவில் வளர்ச்சி (சுமார் 40 நிமிடங்கள்)

15 நிமிடங்கள்

4. ஜெபம்:(துதித்தல்) கர்த்தரைப் புகழ்ந்து,உங்கள் நன்றியையும் வழிபாட்டையும் அவருக்கு வெளிப்படுத்துங்கள்; இசையுடன் அல்லது இல்லாமலும் செய்யலாம். வழிபாட்டை எவ்வாறு வழிநடத்துவது என்பதற்கான எளிய மற்றும் இதை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வழிமுறையை நீங்கள் காண்பிப்பது முக்கியம் (உதாரணமாக: ஒரு வித இசைக்கருவிகளுமில்லாது பாடுதல்,( a cappella worship) வலை ஒளி (youtube) அல்லது பதிவுசெய்யப்பட்ட பிற வழிபாட்டுப் பாடல்களைப் பயன்படுத்துதல்,ஒரு சங்கீதத்தைப் படித்து, அதிலிருந்து ஈர்க்கப்பட்டதற்கு நன்றி சொல்லுங்கள், ...)

25 நிமிடங்கள் 5. பாடம்: பாடம் கற்பிக்கவும், அவர்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் அவற்றைத் தெளிவுபடுத்தவும்.மாற்றாக, நீங்கள் ஒரு பரிசுத்த வேதாகமத்தில் ஒரு பகுதியை ஒன்றாக வாசித்து,நாம்

அதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று கேட்கலாம் (நீங்கள் கண்டுபிடிப்பு பரிசுத்த வேதாகம படிப்பில் கேள்விகளைப் பயன்படுத்தலாம்). நடைமுறைப் பயிற்சிக்குக் கூடிய நேரத்தை செலவிடுவதில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

== மூன்றில் மூன்றாவது: சீடர்களை உருவாக்குதல் == பயன்பாடு மற்றும் பெருக்கம் செய்வதற்கும் ஆயத்தமாகுதல்.(சுமார் 40 நிமிடங்கள்)

25 நிமிடங்கள் 6. பயிற்சி: பாடத்திற்கு ஒரு குறிப்பிட்ட பயன்பாடு இருந்தால்,அதை இந்த பகுதியில் செய்யுங்கள் ( கர்த்தருடனான எனது கதை:இதை இப்போது எழுதுங்கள்; ஜெபம்:பல்வேறு வகையான ஜெபங்களைப் பயிற்சி செய்யுங்கள்).மாற்றாக, ஒவ்வொருவரும் இரண்டு குழுக்களாக ஒருவருக்கொருவர் கற்பிப்பதன் மூலம் இந்த பாடத்தை அனைவரும் பயிற்சி செய்யலாம். பாடங்களின் உள்ளடக்கங்களில் எல்லோரும் வசதியாக இருப்பதோடு,அதில் மற்றவர்களுக்கும் பயிற்சியளிக்க முடியும் என்பதே இதன் நோக்கம்.
5. நிமிங்கள்

7. இலக்குகளை நிர்ணயித்தல்: அனைவரும் சிந்திக்கவும், ஜெபிக்கவும்,தனிப்பட்ட இலக்குகளை அமைக்கவும் நேரம் கொடுங்கள்.பின்னர் எல்லோரும் தங்கள் தங்கள் குழுவின் இலக்குகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

10 நிமிடங்கள் 8. ஜெபம் ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள்:நீங்கள் கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்துவதற்கு கர்த்தரின் வல்லமைக்காகவும்,பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்காகவும், தனிப்பட்ட பிரச்சினைகளுக் காகவும், நீங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்தும் ஜெபிக்கலாம் அல்லது சிறிய குழுக்களாகப் பிரிந்தும் ஜெபிக்கலாம்.

== தடித்த(முக்கியமான) பகுதிகள் == மூன்று-மூன்றில் ஒன்று படிநிலையின் வரைபடம் சில பகுதிகள் தடிப்பான எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளன: பொறுப்புக்கூறல், தரிசனம்(தொலைநோக்குப் பார்வை),பயிற்சி, இலக்குகளை அமைத்தல் மற்றும் ஜெபம்,ஆராதனை. இவை ஒருபோதும் விட்டுவிட முடியாத முக்கிய பாகங்கள்.மேலும் புதியவர்களைச் சீடர்களாக்கும் குழுக்களையும், இந்தச் சீடர்கள் மேலும்,மேலும் பலரைச் சீடராக்குவதைப் பார்ப்பதற்கும் அவை முக்கியமானவை ...

உங்களுக்கு நேரம் குறைவாக இருந்தால்,சில தடிப்பில்லாத,முக்கியமற்ற பகுதிகளை நீங்கள் விட்டுவிடலாம்.இதை நீங்கள் விசித்திரமானதாக உணரக்கூடும்,இதனால் நீங்கள் பாடத்தின் சில பகுதியையும் விட்டுவிடலாம்! நீங்கள் முந்தைய பாடத்தை பயிற்சி செய்கிறீர்கள், இதனால் எல்லோரும் அதில் வசதியாக இருப்பார்கள்.