Version: 1.0

படிப்படியாக மன்னித்தல்: பயிற்சிக் குறிப்புகள்

Other languages:
More information about Tamil

படிப்படியாக மன்னித்தல்” பணித்தாள் கற்பிப்பது எப்படி?

இந்தப் பணித்தாள் விசுவாசிகளுக்கும் மற்றும் அவிசுவாசிகளுக்குமாக வடிவமைக்கப்பட்டுள்ளது (நாங்கள் எந்த பரிசுத்த வேதாகமக் குறிப்புக்களையும் சொல்லாமைக்கு இதுவே காரணம்).மன்னிப்பு எவ்வாறு செயல்படுகிறது மற்றும் வலிகளின் எந்தப் பகுதியும் மிஞ்சியிருக்காதவாறு முழுமையாக மன்னிப்பது எப்படி என்பதையும் விளக்குவதில் இது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.நாம் ஏன் மன்னிக்க வேண்டும் என்று வாதிடுவதில்லை ஆனால் உண்மையில், இதன் உள்ளடக்கத்தைப் படிப்பதன் மூலம்,பலர் மன்னிக்கத் தூண்டப்படுகிறார்கள். பெரும்பாலான மக்கள் இந்தக் கோட்பாட்டிலிருந்து பயனடைகிறார்கள், நிச்சயமாக,இதன் நோக்கம் மக்கள் அதைப் பயன்படுத்துவதோடு அதன் சக்தியையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதாகும்.

சாத்தியமான பயன்பாட்டுக் காட்சிகள்:

  • காயங்களிலிருந்து விடுபட விரும்புவதாக ஏற்கனவே வெளிப்படுத்திய ஒரு நபருடன் (அவர்களுடன் பணித்தாளை முதலில் படிக்குமாறு பரிந்துரைக்கிறோம் - (குறைந்தபட்சம் மன்னிக்கும் படிகள் ஐந்து வரை), அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்)
  • சிறிய குழுக்கள் மற்றும் வீட்டுச் சபைகளில் (முதலில் நீங்கள் பணித்தாளைத் தயார் செய்யுங்கள்,

பின்னர் நீங்கள் ஒரு நபரை செயல்முறையின் மூலம் வழிநடத்தலாம்,மற்றவர்கள் செயல்முறையை கவனிக்க வேண்டும்)

  • தேவாலயங்களில்- திருச்சபைகளில் பெரிய பயிற்சி நிகழ்வுகள் (செயல்முறையின் மூலம் மக்களை வழிநடத்த போதுமான உதவியாளர்களை நீங்கள் கொண்டு வருவதை உறுதிசெய்யவும்)
  • நம்பிக்கை இல்லாதவர்களின் குழுக்களுடன்,இந்த வழிமுறையால் சுவிசேஷத்தைக் கொண்டு செல்ல(வெளிப்படுத்த)

முடியும்.

குழு எவ்வளவு அதிகமாக ஒருவரையொருவர் அறிந்திருக்கிறதும், அந்தளவுக்கு ஒருவரையொருவர் நம்புகிறதும் அந்தளவுக்கு மக்கள் தாங்கள் பாதிக்கப்பட்ட இடத்தைப் பற்றித் திறந்து பகிர்ந்துகொள்வது எளிது. அதாவது இப்பொழுது இருக்கும் குழுக்களுடன் எப்பொழுதும் பயிற்சிமுகாம் நடத்துவது நல்ல யோசனையாகும்.

என்ன மன்னிப்பு இல்லை?

இடம் பற்றாக் குறைவாக இருப்பதால், மன்னிப்பின் சாதகமான விளக்கத்தில் மட்டும் கவனம் செலுத்த விரும்பினோம்,இதை நாங்கள் பணித்தாளில் சேர்க்கவில்லை. ஆனால் மன்னிப்பதில் இருந்து மக்களைத் தடுக்கும் மன்னிப்பு என்றால் என்ன என்பது பற்றிய தவறான புரிதலை நீங்கள் தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியமானதாக இருக்கலாம்.

  • மன்னிப்பு என்பது நல்லிணக்கம் போன்றது அல்ல.நல்லிணக்கமும் மறுசீரமைப்பும் சாத்தியமில்லை, உதாரணமாக,மற்ற நபர் விரும்பவில்லை அல்லது ஏற்கனவே உங்கள் வாழ்க்கையை விட்டு போய்விட்டார். மன்னிப்பு எப்போதும் சாத்தியம்.(சமரசம் -நல்லிணக்கம் என்பது அடிப்படையில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்டவர்களிடையே

ஏற்படுவது பரஸ்பரம். மன்னிப்பு:ஒருவரையொருவர் மன்னிப்புக் கேட்டு மன்னிப்பது)

  • மன்னிப்பு என்பது மறப்பதல்ல. மறப்பது சாத்தியமில்லை, ஆனால் மன்னித்த பின்னர் நினைவின் வலி போய்விடும்.
  • மன்னிப்பது என்பது அந்த நபரை முன்பு போலவே நம்ப வேண்டும் என்ற அர்த்தமில்லை. மன்னித்த பின்னர் மிகவும் கவனமாக இருப்பது (பாதுகாப்பான எல்லைகளை நிறுவுவது)

மிகவும் புத்திசாலித்தனமாகும் (கிற்ரார் விளக்கக் கதையைப் பார்க்கவும்).

  • மன்னிப்பு என்பது விடயங்களை தரை விரிப்பின் (ஜமக்காளம்)கீழ் துடைத்து மறைப்பது என்று அர்த்தமில்லை.
  • மன்னிப்பது என்பது "அது ஒன்றும் பெரிய விடயமில்லை" என்று சொல்லவில்லை
  • மன்னிப்பது என்பது பலவீனமாக இருப்பது என்ற அர்த்தத்தைக் குறிக்காது.
  • மன்னிப்பது என்பது நீங்கள் சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அர்த்தமில்லை.

விளக்கக் கதை: உங்கள் கிற்ராரை இரவல் கொடுத்தல்

உங்களிடம் ஒரு நல்ல கிதார் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள்,நான் உங்களிடம் வந்து,"ஒரு நாளைக்கு உங்கள் கிதாரை எனக்குத் தரலாமா?"என்று கேட்க, நீங்களும் "நிச்சயமாகத் தருகிறேன்,ஆனால் தயவுசெய்து அதை கவனமாகப் பாவியுங்கள்" என்று நீங்கள் பதிலளிக்கிறீர்கள்.அடுத்த நாள் நான் கிதாரைத் திருப்பிக் கொடுக்கிறேன், ஆனால் அதில் இப்போது பெரிய கீறல்கள் உள்ளன, நான் சொல்கிறேன்,“ஆம், எனக்கு குழந்தைகள் இருப்பதால் அது நடந்தது. ஆனால் அதன் சத்தம் இன்னும் அப்படியே ஒலிக்கிறது." நீங்கள் கோபமாகவும் சோகமாகவும் இருக்கிறீர்கள்.ஆனால் இறுதியாக நீங்கள் என்னை மன்னிக்க முடிவு செய்தீர்கள், ஏனென்றால் கோபமாக இருப்பது பயனளிக்காது அடுத்த வாரம் நான் மீண்டும் வந்து, “உங்கள் கிதாரை மீண்டும் தரலாமா? என்று இரவல் கேட்கிறீர்கள்”
இது உங்கள் கிதார்,அதை என்னிடம் கொடுக்கவும் கொடுக்க மறுக்கவும் சுதந்திரம் உங்களுக்கு உள்ளது.நீங்கள் என்னை மன்னித்துவிட்டீர்கள்,ஆனால் உங்கள் கிதார் விஷயத்தில் நான் கவனமாக இல்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பதால்,அதை மீண்டும் எனக்குக் கொடுப்பதில்லை என்று நீங்கள் முடிவு செய்துவிடுவீர்கள்!

பணித்தாள் மிகவும் திறம்பட கற்பித்தல்

  • பணித்தாளின் பிரதியை அனைவருக்கும் கொடுங்கள். யாருடன் இதைப் பகிரலாம்/செய்யலாம் என்று அவர்கள் யோசித்து ஜெபிக்க வேண்டும் என்ற சவாலுடன் இரண்டு பிரதிகளையும் அவர்களுக்குக் கொடுக்கலாம்.மக்களுக்கு வேறு தாய்மொழி இருந்தால், முடிந்தால் அவர்களின் மொழியிலும் ஒரு பணித்தாள் கொடுங்கள்.
  • பங்குபெறுபவர்கள் அதை சத்தமாகவும் பந்தி பந்தியாகவும் படிக்கட்டும். கேள்விகளைக் கேட்க ஒவ்வொரு பந்திக்குப்(அல்லது ஒவ்வொரு வினாடிக்கும்) பிறகு நிறுத்தவும்,சில குறிப்புகள் மற்றும் விளக்கப்படங்களைச் சேர்க்கலாம்.
  • நேரத்தில் கவனம் செலுத்தி, இறுதியில்"உங்களை நீங்களே பரிசோதித்தல்"பகுதியைப் போதுமான நேரத்தில் செய்வதற்கான நேரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • இந்த செயல்முறையை தாங்களாகவே அனுபவிக்க முடிந்தால் அல்லது மன்னிக்கும் படிகளின் மூலம் நீங்கள் வேறொருவரை வழிநடத்துவதை அவர்களால் அவதானிக்க முடிந்தால் உள்ளடக்கத்தை சிறந்த முறையில் கற்றுக்கொள்வார்கள். செயல்முறையின் மூலம் ஒருவரை வழிநடத்தும் போது, குறிப்பாக ஒரு முழு குழுவின் முன்னிலையில் இதைச் செய்வதற்கு அதிக அனுபவம் தேவைநீங்கள் வசதியாகவும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரிந்தால் மட்டுமே இதைச் செய்யுங்கள்!உங்களை தயார்படுத்த உங்கள் பயிற்சியாளரிடம் கேளுங்கள்.

நல்ல குறிப்புகளும் விளக்கப்படங்களும்: பணித்தாள் மூலம் படிப்படியாக

முதல் பந்திக்குப் பிறகு (அறிமுகம்)

முதல் பந்திக்குப் பிறகு ஒரு சிறிய உதாரணம் கொடுப்பது நல்லது. உதாரணத்திற்கு: “நீங்கள் ஒரு நல்ல நண்பருடன் தனிப்பட்ட ரகசியத்தைப் பகிர்ந்துள்ளீர்கள்.ஆனால் அவர் கிசுகிசுத்து (வீண் பேச்சு)மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வர்.இதனால் நீங்கள் உண்மையிலேயே கோபமாக இருக்கிறீர்கள்." முதலாவது (தவறான) எதிர்வினை: "இனி யாரையும் நம்ப முடியாது" என்று நீங்கள் உணர்கிறீர்கள்,மேலும் ஆழமான விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நிறுத்துவீர்கள். நீங்கள் உங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பாக அவநம்பிக்கையின் சுவரைக் கட்டுகிறீர்கள்,ஆனால் உண்மையில் நீங்கள் உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்போது உங்களை மேலும் அதிகமாகக் காயப்படுத்துகிறீர்கள். இரண்டாவது (தவறான) எதிர்வினை:நீங்கள்,அவர் உங்களுக்குச் செய்த தவறை அவருக்குச் செய்ய விரும்புகிறீர்கள், அதனால்,அவர் கஷ்டப்படட்டும்,அவர் செய்தது எவ்வளவு மோசமானது என்பதை அனுபவிக்கட்டும். நீங்கள் பழிவாங்க முயற்சிக்கிறீர்கள், ஆனால்,நீங்கள் இதைச் செய்வதன்மூலம்,தொடர்ந்தும் இந்தப் பிரச்சனையைப் பற்றியே சிந்திக்கிறீர்கள், மேலும் அதிலிருந்து முற்றாக விடுபடவுமில்லை.மேலும், நீங்கள் உங்கள் மீது பாவத்தை குவித்து விடுகிறீர்கள்.

இரண்டாவது பந்திக்குப் பிறகு ("மன்னிப்பு என்றால் என்ன?")

கேள்விகளைக் கேளுங்கள் மற்றும் அனைத்து தவறான புரிதல்களையும் தெளிவுபடுத்துங்கள். "என்ன மன்னிப்பு இல்லை" (மேலே பார்க்கவும்) என்ற பந்தியின் சில பகுதிகளை நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பலாம்.தகுறிப்பாக மன்னிப்புக்கும் நல்லிணக்கத்திற்கும் உள்ள வித்தியாசம் பொதுவாக புதியதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

மூன்றாவது பந்திக்குப் பிறகு ("மன்னிக்கும் படிகள்")

இந்தப் பத்திக்குப் பிறகு நிட்சயமாக நிறுத்திவிட்டு, “இந்த ஐந்து படிகளில் எது உங்களுக்கு கடினமானது?” என்ற கேள்வியைக் கேளுங்கள். எல்லோரும் கேள்விக்கு பதிலளிக்கட்டும். இவை அனைத்தும் தனிப்பட்ட முறையில் மக்களுக்கு என்ன அர்த்தம் என்பதை உண்மையில் சிந்திக்க வைக்க இது நிறைய உதவுகிறது. ஒரு சிறிய உதாரணத்தைக் கொடுப்பதும் நல்லது, நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே சிறிய விளக்கத்திற்குச் செல்லலாம்:

  1. நான் என் நண்பருடன் தனிப்பட்ட ஒன்றைப் பகிர்ந்து கொண்டேன்,அவர் என்னிடம் கேட்காமலேயே அதை மற்றவர்களிடம் கூறினார்.
  2. நான் உண்மையில் கோபமாக இருக்கிறேன்.உண்மையில் இது சங்கடமாகவும் இருந்தது, நான் வெட்கப்படுகிறேன், ஏனென்றால் இப்போது அதைப் பற்றி மற்றவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
  3. என்னிடம் கேட்காமல் கிசுகிசுப்பதும் அதை மற்றவர்களிடம் சொல்வதும் அவர் தவறு.
  4. நான் ஜெபிக்க ஆரம்பிக்கிறேன்: "கர்த்தவே, நான் நீதிபதியாகிய உங்களிடம் வருகிறேன், என் நண்பருக்கு எதிராக நான் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறேன்:அவர் கிசுகிசுத்தார் மற்றும் என்னிடம் கேட்காமல் என் ரகசியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார். நான் இப்போது மிகவும் கோபமாக இருக்கிறேன், மேலும் வெட்கப்படுகிறேன்.
  5. இப்போது நான் ஜெபம் பண்ணுகிறேன்:“சரி கர்த்தவே,இந்த முழு வழக்கையும் உங்கள் கைகளில் ஒப்படைத்துவிட்டு, அதைக்

கைவிட்டுவிடுகிறேன். நான் இனி அவருக்கு எதிராக நியாயத்தீர்ப்பு வழங்கமாட்டேன்.நான் என் நண்பரை மன்னிக்கிறேன்

நான்காவது பந்திக்குப் பிறகு ("கர்த்தரிடம் அநீதி குற்றச் சாட்டுக்களைக் கொண்டுவருதல்")

பெரும்பாலான விசுவாசிகள் கர்த்தருடன் இப்படிப் பேசுவதில்லை,அது அவர்களுக்கு விசித்திரமாகத் தோன்றலாம்.நீங்கள் பின்வரும் குறிப்புக்களைப் பயன்படுத்தலாம் "கர்த்தர் ஒரு நீதிபதி என்று நீங்கள் நம்புகிறீர்களா?" என்று நான் உங்களிடம் கேட்டால்,பெரும்பாலானோர் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் "அது உங்கள் வாழ்க்கையில் என்ன அர்த்தம்?" என்று நான் உங்களிடம் கேட்டால், "சரி,என்பீர்கள்.நான் இறந்த பிறகு ஒரு நாள் நான் அவர் முன் நிற்பேன்,அவர் என்னை நியாயந்தீர்ப்பாரா?!" என்பதைத் தவிர உங்களிடம் அதிக பதில் இருக்காது.அது சரிதான்,ஆனால் கர்த்தர் ஒரு நீதிபதி என்பது மட்டுமல்லாது இன்னும் அதிக அர்த்தம் உண்டு! இதுதான் நடைமுறைப் பயன்பாடு:கர்த்தரிடம் அநீதியான குற்றச் சாட்டுகளை,நீதிபதியான நிலையிலிருக்கும் அவரோடு தொடர்புகொள்வதற்கும் நமக்கு உரிமை உண்டு.நாம் அதை ஒருபோதும் செய்யவில்லை என்றால், கர்த்தரின் இந்த அம்சத்தை நாம் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

ஐந்தாவது பந்திக்குப் பிறகு ("மேலும் குறிப்புகள்")

இந்த குறிப்புகள் பற்றிய சாத்தியமான விளக்கங்கள்:

உதவியாளரின் உதவியைப் பயன்படுத்துதல்
இங்கே பிரச்சனை என்னவென்றால்,பலர் நல்ல உதவியாளர்களாக இல்லை. நல்லவர்களாய் இல்லாத-மோசமான உதவியாளரின் மூன்று பொதுவான பதில்கள்:
  1. என்ன நடந்தது,நீங்கள் என்ன செய்தீர்கள் என்று அவர்களிடம் சொல்ல, அவர்கள் உங்களை நியாயந்தீர்ப்புத் தரத் தொடங்குகிறார்கள்: “என்ன?! நீங்கள் இதை செய்தீர்களா?!அது ஒரு முட்டாள்தனமான யோசனை!”
    →மிக்க நன்றி,ஆனால் நான் இனி மேல் உங்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டேன்.
  2. நீங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள் உதாரணம். உங்கள் முன்னாள் காதலியால் நீங்கள் எப்படி வேதனைப்படுகிறீர்கள் என்பது பற்றியது. அவர்கள் தங்கள் முன்னாள் காதலியால் எப்படி வேதனைப்படுத்தப்பட்டார்கள் என்பதைப் பற்றிய சொந்த, இதேபோன்ற கதையைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்குகிறார்கள், ஒருவேளை "ஆமாம், உங்களுக்குத் தெரியும், பெண்கள் விஷயத்தில் எப்போதும் அப்படித்தான்" என்று ஒரு கருத்தைக் கூட சொல்லலாம்.
    → சரி, அது எனக்கு உதவாது. அனைத்தும். இது விஷயங்களை இன்னும் மோசமாக்குகிறது.
  3. அவர்கள் இரக்கத்தைக் காட்டு கிறார்கள்: “நீங்கள் என்ன அனுபவித்தீர்களோ,அது மிகவும் கஷ்டமானதாகும். நான் மிகவும் துக்கமாக இருக்கிறேன்,அது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். வா,நான் உன்னைக் கட்டி அணைக்கிறேன். அது மிகவும் மோசமாகும்.”
    → நல்லது,இரக்கம் காட்டுவது நல்லது,ஆனால் அது மட்டும் வேதனையிலிருந்து விடுபட உதவாது.
ஒரு நல்ல உதவியாளர் சுறுசுறுப்பாகக் கேட்பதைப் பயன்படுத்துகிறார், நியாயந்தீர்ப்பு வழங்கமாட்டார்,ஆனால் இந்த முறைகளைக் கடந்து நீங்கள் கர்த்தருடன் தொடர்பு கொள்ளக் கனிவாக உதவுகிறார், எனவே நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும் (பணித்தாள் "உதவி செய்பவரின் பங்கு" ஐப் பார்க்கவும்).
நமது சொந்தப் பாவம்
அந்த நிலையில் உங்கள் வாழ்க்கையில் எப்படி இருந்தது என்பதை நீங்கள் உங்கள் சொந்தக் கதையைப் பகிர்ந்து கொள்ளலாம்.
மன்னிப்பதில் உறுதியாயிருப்பது
"பட்டமளிப்பு" விளக்கக் கதை போன்றவற்றைப் பகிர்வது மிகவும் நல்ல யோசனை:
நீங்கள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டீர்கள், பட்டப்படிப்பு வரப்போகிறது. அதைப் பற்றி உங்கள் பெற்றோரிடம் சொல்லி அவர்களை அழைக்கிறீர்.

"நாங்கள் நிச்சயம் வருவோம் !"என்று உங்கள் தந்தை கூறுகிறார்.
பட்டமளிப்புத் தினத்தன்று உன்னுடைய எல்லா நண்பர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் எல்லா மக்களும் நன்றாக உடை அணிந்து வந்துள்ளனர்.ஆனால் யார் வரவில்லை? உங்கள் தந்தை. நீங்கள் உண்மையிலேயே சோகமாகவும் வருத்தமாகவும் இருக்கிறீர்கள். இந்த உணர்வுகளில் இருந்து விடுபட்டு உங்கள் தந்தையை மன்னிக்க வேண்டும் என்று பிறகு முடிவு செய்கிறீர்கள்.
ஆனால் பின்னர், இது உண்மையில் உங்கள் தந்தை எப்போதும் இந்த மாதிரியே நடப்பது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்:அவர் ஏதாவது வாக்குறுதி கொடுப்பார்.ஆனால் அதை அவர் நிறைவேற்ற மாட்டார். உண்மையிலே அவர் உங்களுக்குத் தேவைப்படும்போது,​​​​அவர் வேலைப்பழுவிலே இருந்தார். இப்போது அவர் பட்டப்படிப்புக்கு வராததற்காக அவரை மன்னித்துவிட்டீர்கள்,ஆனால் இதே போன்ற பல சூழ்நிலைகள் உள்ளன. இந்த வேதனைகளிலிருந்து விடுபட, நீங்கள் மீண்டும் மன்னிக்கும் வழிகளைக் கடந்து செல்ல வேண்டும்,மேலும் அவர் உங்களுக்கு எதிராக பாவம் செய்த மற்ற நேரங்களில் அவரை மன்னிக்க வேண்டும்.

கடைசிப் பகுதிக்குப் பிறகு ("உங்களை நீங்களே சோதித்துப் பார்ப்பது")

ஏதேனும் கேள்விகளைத் தெளிவுபடுத்துங்கள்,பின்னர் ஜெபத்தில் தரித்திருங்கள். ஒரு நல்ல யோசனை என்னவென்றால், நீங்கள் சத்தமாக ஜெபித்து, இரண்டு நிமிட மௌனம் கடைப்பிடித்து, கர்த்தரிடம் இந்தக் கேள்விகளைக் கேட்கலாம். முடிந்தால், மக்கள் யாரை மன்னிக்க வேண்டும் என்பது குறித்து தனிப்பட்ட குறிப்புகளை எடுக்கட்டும்.

இரண்டு நிமிடங்கள் முடிந்ததும்,கர்த்தர் தங்களுக்குக் காட்டியதை அனைவரும் (அவர்கள் விரும்பும் அளவுக்கு) பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுங்கள். பலரிடம் மன்னிக்க வேண்டியவர்களின் பட்டியல் இருக்கும்.அவர்கள் யாருடன் தொடங்க விரும்புகிறார்கள் என்று கேட்டுத் தொடங்குவதற்கு அவர்களுக்கு உதவுங்கள். சிறிய பிரச்சனையுடன் தொடங்கப் பரிந்துரைக்கிறோம். எவ்வளவு அதிகமாக மன்னிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டு, அதைச் செய்யும் அனுபவத்தைப் பெற்றால், அது எளிதாகிவிடும்.

மற்றவர்களின் முன் மன்னிப்புச் செயல்முறையின்(வழி) மூலம் ஒருவரை வழிநடத்த நீங்கள் திட்டமிட்டால்,நீங்கள் கவனமாகக் கேட்டு,நீங்கள் யாரை வழிநடத்தலாம் மற்றும் யாரை வழிநடத்த வேண்டும் என்பதைக் கண்டறிய ஜெபம் செய்யுங்கள் (பின்வரும் முக்கியமான அளவுகோல்களைக் கையாலாம்: அந்த நபர் கர்த்தரிடமிருந்து தெளிவாகக் கேட்கிறாரா? முழு விஷயமும் ஏற்கனவே தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும் பெரிய வேதனை இல்லை? குற்றவாளி யாருக்கும் தெரியாதா?)