Version: 1.0

குணப்படுத்துதல்

கர்த்தர் வானத்தையும் பூமியையும் படைத்தபோது நோயோ மரணமோ இல்லை. இருப்பினும், மனிதர்கள் முதன்முறையாக கர்த்தருக்குக் கீழ்ப்படியாமையால், இந்த உலகில் நமக்கு நோய்கள் வந்திருக்கின்றன. நாம் ஆதியில் உருவாக்கப்பட்டோம் என்பதற்காகவல்ல, அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகவே, மக்களை குணப்படுத்தவும் மீட்டெடுக்கவும் கர்த்தர் விரும்புகின்றார். அவர்(பிதா) நமக்கு ஓர் இரட்சகரை அனுப்ப வேண்டும் என்ற ஒரு சிறப்புத் திட்டத்தை வைத்திருந்தார். அந்த இரட்சகரைப் பற்றி பரிசுத்த வேதாகமம் இவ்வாறு கூறுகிறது: “நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் நாம் குணமடைகிறோம்” (ஏசாயா 53: 5).

இந்த மீட்பர் இயேசு கிறிஸ்து, மேசியா. இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது, அவர் ​​பலரைக் குணப்படுத்தினார்(உதாரணமாக:லூக்கா 5: 17-26). பிதாவின் திட்டத்தின்படி, இயேசு கிறிஸ்து நமக்காகப் பலியாகி மரித்தார், மீண்டும் உயிர்த்தெழுந்தார். அதனால் நாம் மீண்டும் ஒரு புதிய வாழ்வைப் பெற முடியும். அவர் இப்பொழுது பூமியில் இல்லை என்றாலும், அவர் இப்பொழுதும் அப்படியே இருக்கிறார், இன்னும் மக்களை நோய்களிலிருந்து குணப்படுத்துவதற்கும் அவர்களை பாவங்களிலிருந்து விடுவிப்பதற்கும் அவருக்கு எல்லா வல்லமையும் என்றும் உண்டு. அவரைப் பின்பற்றவும், அவர் சொன்னவற்றிக்குக் கீழ்படிந்து நடக்கவும் அவர் நம்மை அழைக்கின்றார். கர்த்தரின் பார்வைக்கு இது மிக முக்கியமானதாகும், அவருடைய விருப்பத்தில் கொடுக்கும் வரத்தை ஏற்றுக்கொள்வதற்கும் உணர்ச்சி பூர்வமான மற்றும் ஆன்மீக குணப்படுத்ததலைப பெறுவதற்கும் நாம் முடிவெடுப்போம்.

இயேசு கிறிஸ்து, தம்மைப் பின்பற்றுபவர்களை நோயுற்றவர்களுக்காக ஜெபிக்க அழைக்கிறார், அவ்வாறு ஜெபிப்பதற்கான வல்லமையையும் தருகிறார்.“ஒரு நாள் இயேசு கிறிஸ்து தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, எல்லாப் பேய் பிசாசுகளையும் விரட்டவும், எல்லா நோய்களையும் குணப்படுத்தவும் அவர்களுக்கு வல்லமையையும், அதிகாரத்தையும் கொடுத்தார். தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி எல்லோரிடமும் பிரசங்கிக்கவும், நோயுற்றவர்களைக் குணப்படுத்தவும் இயேசு கிறிஸ்து அவர்களை வெளியே அனுப்பினார்” (லூக்கா 9: 1-2)

ஜெபம் (பிரார்த்தனை) செய்வது எப்படி (அறிமுகம்)

  • முதலில்அந்த நபரிடம் கேளுங்கள்:“சரியாக என்ன பிரச்சனை? நான் எதற்காக ஜெபிக்க முடியும்?”
    “இந்த நேரத்தில் உங்களுக்கு ஏதேனும் வலி அல்லது குறைபாடுகள் உள்ளதா?” என்றும் கேளுங்கள். (இதனால் ஜெபத்திற்குப் பிறகு ஏதாவது மாறிவிட்டதா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்)
  • அவர்கள் மீது கைகளை வைத்து, நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஒரு சிறிய ஜெபத்தைச் செய்வீர்கள், என்பதை விளக்குங்கள். அதற்கு அவர்களின் அனுமதியைக் கேளுங்கள்.
  • உங்கள் ஒரு கையை(அல்லது இரு கைகளையும்)சரியான முறையில் அவர்கள் மீது வைக்கவும்.
  • ஜெபம் செய்யும் போது, வலி அல்லது உடல் உறுப்பு போன்றவற்றை நேரடியாகச் சொல்லி ஜெபிக்கவும்.
  • ஜெபிக்கும் போது உங்கள் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டிருப்பதால், அந்த நபருக்கு ஏதாவது நடந்தால் உங்களால் பார்க்க முடியும்.
  • குறுகியதும், சுருக்கமானதுமான ஜெபத்தை ஏறெடுக்கவும். ஒரு வசனம்“வலி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் போ! ஆமென். ”என்பது போதும்.
  • ஜெபத்திற்குப் பிறகு, அந்த நபரிடம் கேளுங்கள்:“நீங்கள் ஏதாவது உணர்ந்தீர்களா? இப்போது வலி எப்படி இருக்கிறது?”
    நீங்கள் இதைப் போன்ற அளவைப் பயன்படுத்தலாம்: “0 (வலி இல்லை) முதல் 10 வரை (அதிக வலி), முன்பு எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது?”
    அவர்களுக்கு குறைபாடுகள் இருந்தால், மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க மீண்டும் முயற்சிக்கச் சொல்லுங்கள்.
  • தொடர்ந்தும் ஜெபம், செய்ய முன்வரவும். பெரும்பாலும் சிகிச்சைமுறை படிப்படியாக அல்லது பலமுறை ஜெபத்தின் பிறகு வருகிறது.
  • அந்த நபர் குணமடையும்போது: ஒன்றாக இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி சொல்லுங்கள்!

அறிவிப்பு:

  • இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்” ஜெபிப்பது என்பது மந்திர சூத்திரத்தைப் பயன்படுத்துவதை அர்த்தப்படுத்துவதில்லை. இதன் பொருள், இயேசு கிறிஸ்து என்ன செய்கிறார் என்பதற்கு மரியாதை அளிப்பது மற்றும் குணமடைய யார் காரணம் என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் பின்னர் அறிந்து கொள்வதை உறுதி செய்வதாகும்.
  • குறைந்த பட்சம் ஒரு நபராவது இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்க வேண்டும், அவரால் குணப்படுத்த முடியும் என்றும் நம்ப வேண்டும். விசுவாசம் ஒரு தசை போன்றது:நீங்கள் அதை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறீர்களோ, அதைப் பயிற்றுவிக்கிறீர்களோ, அவ்வளவு வலிமையடைகிறது. ஒரு குறிப்பிட்ட பிரச்சனையால் நீங்கள் இன்னும் அதிகமாக துயரப்பட்டால், அதிலிருந்து விடுபட ஜெபம் செய்வதில் அதிக அனுபவமுள்ள மற்றவர்களுடன் சேர்ந்து வேறு நேரத்தில் ஜெபம் செய்யுங்கள்.
  • மக்கள் தங்கள் உடம்பைப் பயன்படுத்த முயற்சிக்கும்போது கவனமாக இருக்கவேண்டும், ஏனெனில், அவர்கள் தங்கள் உடம்பை நன்கு அறிவார்கள். ஒரு வைத்தியர் மருத்துகளைப் பரிந்துரைத்தால், வைத்தியர் குணமடைந்ததை உறுதிசெய்து, மருந்தை உட்கொள்வதை நிறுத்துமாறு உத்தரவிட வேண்டும்.

குணமடையாதபோது ...

குணமடைதல் அல்லது மாற்றம் எப்போதும் ஜெபத்திற்குப் பிறகு உடனடியாக நடக்காது குறைந்தபட்சம் அது கண்ணுக்குத் தெரிவதில்லை. இது பல்வேறு காரணங்களுக்காக இருக்கலாம்:
மன்னிக்காமல் இருப்பது பாவம் (யாக்கோபு 5:15-16), ஆரோக்கியமற்ற உணவு, ஒருவரின் உடலை நன்கு கவனித்துக்கொள்ளாதது, பிசாசுகளின் அடக்குமுறைகள் அல்லது தாக்குதல்கள், மற்றும் நம்முடைய விசுவாசமின்மை (மத்தேயு17:14:21) போன்றவை. அல்லது அது வெறுமனே கர்த்தருக்கு வேறு நேரம் இருப்பதால் அது இருக்கலாம்.(யோவான் 11).

இது போன்ற சந்தர்ப்பங்களில், இல்லாததைவிட அந்த நபர் உங்களிடம் சொன்ன பிரச்சினை உண்மையில் முக்கிய பிரச்சினையாக இருக்காது. முக்கிய அறிகுறிகளுக்குப் பின்னால் உள்ள உண்மையான காரணத்தைக் கண்டறிவதன் மூலம் அதனைச் சமாளிக்க முடியும். இதற்குப் பின்வரும் நான்கு ஜெபங்களைப் பயன்படுத்தவும்:

நான்கு பயனுள்ள ஜெபங்கள்

  1. “கர்த்தவே, உம்மை எது மிகவும் மகிமைப்படுத்துகிறதோ,

அதைத் தயவுசெய்து, இந்த சூழ்நிலையில் செய்யுங்கள்.”

  1. “இந்த நேரத்தில் நீங்கள் எனக்கு என்ன கற்பிக்க விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டுங்கள்.”
  2. “தயவுசெய்து இந்த நோய்களுக்கான காரணத்தை /அல்லது நோயின் நோக்கத்தை வெளிப்படுத்தவும்.”
  3. “கர்த்தவே, நான் அடுத்து என்ன செய்ய வேண்டும்?”

நோய்வாய்ப்பட்ட நபரிடம், அவர்களின் மனதில் ஏதாவது வந்ததா என்று கேளுங்கள். கர்த்தர் அவர்களுக்கு அல்லது உங்களுக்கு ஏதாவது வெளிப்படுத்தினால், அதை முதலில் கையாளுங்கள்.

உடலுக்கும் ஆவிக்கும் உள்ள தொடர்பு

ஏதாவது தவறு நடந்தால் நம் ஆன்மா நம் உடலுக்கு தெரிவிக்கிறது. எனவே, உடல் ரீதியான பிரச்சினைகள் நமது உள் வாழ்வில் அவற்றின் காரணமாக இருக்கலாம், மற்றும் உண்மையான பிரச்சினையின் அறிகுறிகள் மட்டுமே.

அப்படியானால், உடல் நலம் வேண்டி ஜெபிப்பதில் ஒரு சிறிய பயனேஉண்டு. முதலில் முன்னேற்றம் இருக்கலாம், ஆனால் அறிகுறிகள் சிறிது நேரம் கழித்து மீண்டும் வரும். நாம் இங்கே ஆன்மீக சிக்கலைச் சமாளிக்க வேண்டும், இதைச் செய்யும்போது, உடல் அறிகுறிகள் படிப்படியாக மறைந்துவிடும்.
நோய் என்பது பெரும்பாலும் ஆன்மீகப் பிரச்சினையைப் பற்றிய குறிப்பைக் கொடுக்கிறது.

உதாரணம் கழுத்து/மூட்டு வலி
ஒரு தவறான நுகம் என் மேல் சுமையைச் சுமத்தலாம் மற்றும்/அல்லது நான் உண்மையில் சுமக்க வேண்டியதல்லாத மற்றவர்களின் சுமைகளைச் சுமக்கிறேன் (மத்தேயு 11:30 ஐப் பார்க்கவும்).

ஆனால் ஒருபோதும் அவசரமாகத் தீர்ப்பினை வழங்காதீர்கள்-எப்போதும் பரிசுத்த ஆவியானவரின் பேச்சைக் கேட்பதில் கவனமாக இருங்கள், மற்றும் மற்ற நபருடன் அன்பு மற்றும் அவர்களின் நன்மைக்கான விருப்பத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்!