Version: 1.0

ஒரு தினசரி ஜெபம்

பரிசுத்த ஆவியே,என்னை நிரப்பும்!

பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வரவும்,உங்கள் மூலம் அவர் செயல்படவும் ஜெபியுங்கள்.

இயேசு கிறிஸ்துவே, என்னைக் காப்பற்று!

இயேசு கிறிஸ்வின் இரத்தம் மற்றும் தியாகத்தின் பாதுகாப்பின் கீழ் உங்களை வைத்துக்கொள்ளுங்கள்.

பரலோக பிதாவே,இன்று எனக்கு எந்த வரம் தேவையோ அதை எனக்குத் தாரும்.

இந்த நாட்களில் உங்களுக்குத் தேவையான சகலனையும் கர்த்தர் தர முடியும்.

==

கர்த்தாவே,என் வாழ்வுக்கும், மற்றும் நீங்கள் எனக்குக் தரும் அனைத்திற்கும் நன்றி. ==== எல்லாவற்றிற்கும் நன்றி சொல்லுங்கள்.


கர்த்தரின் முழுக் கவசத்தையும் அணியுங்கள்

  • இரட்சனை என்றும் தலைக் கவசம்: கர்த்தாவே,என்னைப் பாதுகாத்து,எனது எண்ணங்களையும் மாற்றும்.
  • நீதி என்னும் மார்க்கவசம்: கர்த்தாவே,நான் இரட்சிக்கப்பட்ட உமது கிருபைக்கு நன்றி.
  • சத்தியமென்னும் கச்சை: கர்த்தாவே,உண்மையைப் பேசவும்,உமது சத்தியத்தின்படி வாழவும் எனக்கு உதவுங்கள்.
  • ஆயத்தம் என்னும் பாதரட்சை: கர்த்தாவே,நான் உம்மைப் பற்றி பகிர்ந்து கொள்ளக்கூடிய சூழ்நிலைகளைப் பார்க்க எனக்கு உதவும்,மற்றும் அதைச் செய்யவும் எனக்கு உதவும்.
  • விசுவாசம் என்னும் கேடயம்: கர்த்தாவே,நான் உம்மை விசுவாசிக்கின்றேன்.உம் மீது என் விசுவாசம்

வளரட்டும்.

  • தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம்: கர்த்தாவே,உமது வார்த்தைகளை நான் நன்றாகப் புரிந்துகொள்ளவும், அதனைப் பயன்படுத்தவும்

எனக்கு உதவுங்கள்.

(எபேசியர் 6:10-17)