திருச்சபை(தேவாலயம்)
குடும்பம் ஒரு திருச்சபை(தேவாலயம்)ஆகும்
கர்த்தர் நமக்குத் தந்த வரத்தை ஏற்று,மீண்டும் பிறக்கும்போது நாம் கர்த்தரின் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகிறோம்.
ஒவ்வொரு ஆன்மீக குழந்தைக்கும் ஒரு ஆன்மீக குடும்பம் தேவை.கர்த்தர் நம்முடைய பரலோகத் பிதா.இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் நாம் சகோதர சகோதரிகளைப் போன்றவர்கள்.குடும்பம் என்பது கர்த்தரின் குழந்தைகளாக நாம் யார் என்பதை அறியவும் வளரவும் பாதுகாப்பான ஒரு இடமுமாகும். குடும்பம் பராமரிப்பை வழங்குவதோடு,மேலும் உறவுகளில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் நாங்கள் கற்றுக்கொள்கின்றோம்.
== ஒர் உடலான திருச்சபை
(தேவாலயம்) ==
நாம் இயேசுவின் சரீரம்-அப்படித்தான் புதிய ஏற்பாடு இயேசு கிறிஸ்துவுக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் இடையிலான உறவை விவரிக்கிறது.உடல் என்பதன் பொருள்,ஒவ்வொருவருக்கும்உரிய ஒரு அங்கமும் மற்றும் ஒரு சிறப்புப் உறுப்புமாகும்.இயேசு கிறிஸ்து தலை;நாம் அவருடன் இணைக்கப்பட வேண்டும்,அதனால் அவர் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து நம்மை வழி நடத்த முடியும்.ஓர் உடல் வேலை செய்வது போலவே நாமும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும்.அந்த வகையில் நாம் இயேசு கிறிஸ்துவைப் போல இருக்கிறோம்,அவர் நம் மூலம் செயல்பட முடியும்.
ஓர் உடலான திருச்சபை(தேவாலயம்)
ஓர் அணி என்பது ஒரு பொதுவான நோக்கத்திற்காக ஒன்று சேர்ந்து வேலை செய்யத் தீர்மானம் எடுக்கும் நபர்களின் குழுவாகும்.அவர்கள் ஒன்றாகப் பயிற்சி பெற்று இலக்கை அடைய தேவையான அனைத்தையும் செய்கிறார்கள்.தம்முடைய இராஜ்யத்திற்காக அவருடைய திருச்சபை(தேவாலயம்) ஒன்றுபட வேண்டும் என்று இயேசு கிருஸ்து விரும்புகிறார்.நாங்கள் யாருடன் ஒர் அணியை உருவாக்க முடியும்,யார் எங்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை கர்த்தர் நமக்குக் காட்டுகிறார்.
ஆகவே,"திருச்சபை (“தேவாலயம்”)என்பது ஒரு கட்டிடம் அல்ல,ஆனால் இயேசு கிருஸ்துவைப் பின்பற்றுபவர்களின் ஒரு குழு என்பது தெளிவாகிறது. திருச்சபை(தேவாலயம்) என்னும் போது,எங்கு வேண்டுமானாலும் கூடலாம்.அதாவது பூங்காக்கள்,பாடசாலைகள்,தேநீர்க் கடைகள்,திருச்சபைக்(தேவாலயம்)கட்டிடங்கள்,அலுவலகங்கள்,மற்றும் வீடுகள் அல்லது நிகழ்நிலைகளில் (ஆன்லைனில்)சந்திப்பதைக் குறிப்பதாகும் .
திருச்சபையின் (தேவாலயத்தின்)மூன்று உருவங்கள்(படங்கள்)(ஒரு குடும்பமாக,ஒர் உடலாக,ஓர் அணியாக)உங்கள் வாழ்க்கையில் எப்படி இருக்கும்?
அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் திருச்சபை(தேவாலயம்)
புதிய ஏற்பாட்டில்,"திருச்சபை"(“தேவாலயம்”)என்ற சொல் மூன்று வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது:
- உலகில் இயேசு கிருஸ்துவைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் (உலகளாவிய “கிறிஸ்துவின் உடல்”)
- ஒரு நகரத்தில்/ஒரு பிராந்தியத்தில் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் அனைவரும்
உதாரணம்: "ஜெருசலேமில் உள்ள தேவாலயம்"(அப்போஸ்தலர் நடபடிகள் 11:22) - இயேசு கிறிஸ்துவின் சீடர்களின் ஒரு குழு தவறாமல் ஒன்றாகச் சந்திப்பது
உதாரணம்: "பிரிஸ்கில்லாள், அக்கில்லாவின் வீட்டில் கூடிவரும் சபை."(ரோமர் 16:3-5)
இங்கே நாம் மூன்றாவது பொருளைப் பார்க்கிறோம். என்ன கூறுகள் ஒரு குறிப்பிட்ட திருச்சபையை (தேவாலயத்தை) உருவாக்குகின்றன?
அப்போஸ்தலர் நடபடிகைகள் 2:37-47-ஐ வாசியுங்கள்.
திருச்சபையின் (தேவாலயத்தின்)முக்கிய அம்சங்கள்
ஞானஸ்தானம்
"ஞானஸ்நானம்" என்ற சொல்லின் பொருள் "முழ்குதல்,அமிழ்த்துதல்"என்பது, சுத்திகரித்தல் அல்லது கழுவுதல்.இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றதைப் போலவே,நாமும் ஞானஸ்நானம் பெறுவதன் மூலம் அவருடன் இணைகிறோம்.இயேசு கிறிஸ்து தம்மை சீடர்களுக்குக் கட்டளையிடுகிறார்:
"... பிதா,குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்."(மத்தேயு 28:19)
அப்போஸ்தலர் நடபடிகள் 2:38 ஐ மீண்டும் படியுங்கள்,இது எவ்வாறு விளக்குகிறது மற்றும்"மறுபிறப்பின்"முக்கிய பகுதிகளைக் காட்டுகிறது என்பதைப் பாருங்கள்:
நாம் மனந்திரும்பி நமது பழைய வாழ்க்கையை அடக்கம் செய்கிறோம்.இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்ததைப் போலவே நாமும் அதே வழியில்,ஞானஸ்நானம் பெற ஜலத்தின் அடியில் சென்று ஒரு புதிய வாழ்க்கையுடன் ஜலத்திலிருந்து வெளியே வருகிறோம் (ரோமர் 6: 1-11).எங்கள் புதிய குடும்பத்தில்,இயேசு கிருஸ்துவின் முன்மாதிரியால் வழிநடத்தப்பட்டு பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட முற்றிலும் புதிய வாழ்க்கை முறையைத் தொடங்குகின்றோம்.(மேலும் விவரங்களுக்கு “ ஞானஸ்நானம்”என்ற பணித்தாளைப் பார்க்கவும்).
கர்த்தரின் கடைசி இராப் போசனம்
அவருடைய மரணத்தையும் நம்முடைய பாவங்களுக்காக அவருடைய இரத்தம் சிந்தப்பட்டதையும் நாம் நினைவு கூறும்படி இயேசு கிறிஸ்து,கர்த்தரின் இராப்போஜனத்தை ஆயத்தம்பண்ணினார்.(லூக்கா 22: 15-20).இயேசு கிருஸ்து நமக்காக என்ன செய்தார் என்பதைப் பற்றி சிந்திக்கவும், நன்றி செலுத்தவும் நாம் நேரம் ஒதுக்குகிறோம்.நம்மிடம் அது இருக்கும்போது, நம்முடைய செயல்களை ஆராய்ந்து நம்முடைய பாவங்களை அறிக்கையிட வேண்டும்(1 கொரிந்தியர் 11: 23-29, பணித்தாளில் காண்கவும் “பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்புதல்”).
உடன்படிக்கை
ஞானஸ்நானம் பெற்ற ஒரு குழுவினர் இப்போது இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முடிவு செய்கிறார்கள்.அவர்கள் ஒருவருக்கொருவர் ஓர் உடன்படிக்கை செய்கிறார்கள்,தங்களை ஒரு திருச்சபையாகக் (தேவாலயமாக)காண ஆரம்பித்து கர்த்தரின் சித்தத்தை ஒன்றாகச் செய்ய உறுதியளிக்கிறார்கள்.
தலைவர்கள்
ஆரோக்கியமான திருச்சபைகளில் (தேவாலயங்களில்) மற்றவர்களைப் பற்றிய அக்கறையுள்ள தலைவர்கள் உள்ளனர்.மேலும் அவர்களின் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் கர்த்தருடைய சித்தத்தைச் செய்ய அவர்களுக்கு ஆதரவளிக்கின்றார்கள்.
வழங்குதல்
கர்த்தருக்கு நன்றி செலுத்தும் (அவருக்குப் பரிசாக வழங்குவது)ஓர் ஆராதனைச் செயலாகும்.நம் வாழ்வின் பல பகுதிகளில் கர்த்தருக்கு தியாகங்களை செய்கிறோம், எடுத்துக்காட்டாக,எங்கள் நேரம் மற்றும் எங்கள் திறமைகள்.நமது பணத்தின் ஒரு பகுதியையும் அவருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கேட்டுக் கொண்டுள்ளார். கர்த்தரின் குடும்பத்தில்-அவருடைய உலகளாவிய,பிராந்திய மற்றும் உள்ளூர் இராஜ்ஜியத்தில் கொடுக்க இது ஒரு முக்கியமான வழியாகும்.
ஆராதனை
நாம் கர்த்தரைப் போற்றி,அவருடைய பிரசன்னத்தில் இருக்கிறோம்.
தோழமை(ஒன்றுகூடுதல், ஐக்கியம்)
நாங்கள் ஒருவருக்கொருவர் அன்புடன் கவனித்துக் கொள்கின்றோம்,அத்தோடு ஒருவருக்கொருவர் தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றோம்.
ஜெபம் பண்ணுதல்
ஒன்றாக நாம் கர்த்தருடன் பேசுகிறோம்.
பயிற்சி
நாம் பரிசுத்த வேதாகமத்தைப் படித்து,அன்றாட வாழ்க்கையில் கர்த்தருக்குக் கீழ்ப்படியுமாறு அனைவருக்கும் கற்பிக்கிறோம்.
பெருக்கல்
நாம் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொண்டு பரிசுத்த ஆவியின் வல்லமையால் சீடராக்குகிறோம்.
ஒரு குழுவாக இப்போது நேரம் ஒதுக்கி மதிப்பீடு செய்யுங்கள்: உங்கள் குழுவில் இந்த அம்சங்களில் எவை உள்ளன?
திருச்சபையில் கர்த்தரின் இலட்சியத்தை நீங்கள் நெருங்கிச் செல்ல உங்கள் அடுத்த படிகள் என்ன? (நீங்கள் எதைச் சேர்க்க வேண்டும்? உங்கள் நேரத்தை வேறு விதமாக எங்கே பயன்படுத்த வேண்டும்? போன்றவை)