Version: 1.1

பாவத்தை அறிக்கை செய்து மன்னிப்பைக் கோருதலும் மனந்திரும்புதலும்

சிரமமான உண்மையைக் கேட்பது கடினம்,குறிப்பாக அந்த உண்மை நம்மைப் பற்றியதாக இருக்கும்போது, ​​நாம் மாறவேண்டும். பொதுவாக,மற்றவர்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளைத் தேடி,அவர்கள் எதை மாற்ற வேண்டும் என்பதைப் பற்றி பேசுவோம்;ஆனால் நாம் நேர்மையாக,நம் வாழ்க்கையை பார்த்தால், நல்ல எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது செயல்களை எல்லாம் நல்லவை அல்ல.

உண்மையை எதிர்கொள்வதை விட,நாம் மூன்று வழிகளில் ஒன்றில் செயல்படுகிறோம். பொதுவாக நாம் சிக்கலைப் புறக்கணிப்பதன் மூலம் எதிர்வினையாற்றுகிறோம். நாம் கம்பளத்தின் கீழ் எல்லாவற்றையும் துடைத்து, பாவத்தை மறைக்க பார்க்கிறோம்.மன்னிப்பு கேட்பதற்கு நாம் பெருமைபடுகிறோம் அல்லது வெட்கப்படுவதோ இல்லை, எதுவும் நடக்காதது போல் நாம் நடந்து கொள்கிறோம்.
அல்லது மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்து,அவர்கள் நம்மை விட சிறந்தவர்கள் இல்லை என்றும் முடிவு செய்கிறோம்:“இது அந்தளவிற்கு மோசமில்லை. நாங்கள் அனைவரும் மனிதர்களே ”. இறுதியாக, சூழ்நிலைகள் அல்லது கடந்த காலத்தைக் குற்றம் சாட்டுவதன் மூலம் நம்மை நியாயப்படுத்துகிறோம், எங்களுக்கு வேறு வழி இல்லை என்றும் கூறுகிறோம்.

இந்த உத்திகள் நமது மனநிறைவு மற்றும் முகத்தை காப்பாற்றும் முயற்சியின் வெளிப்பாடாகும்.ஆனால் உண்மையில் அவை நம்மை அநீதியின் பாதைகளுக்கு மேலும் இட்டுச் செல்கின்றன,மேலும் விடயங்கள் கண்டுபிடிக்கப்படுவதைத் தடுக்க பொய்களின் வலையை உருவாக்குகிறோம்.உண்மை வெளிச்சத்திற்கு வந்து விடுமோ என்ற பயத்தில் நாம் வாழ்கிறோம்.அதே சமயம், நம் மனசாட்சி மந்தமானதாக இருக்க அனுமதிக்கின்றோம். ஆகவே,நாம் உண்மையில் நமக்கும் மற்றவர்களுக்கும் எவ்வளவு தீங்கு விளைவிக்கிறோம் என்பதை மிக மிகக் குறைவாகவே பார்க்கிறோம்.

தன் பாவங்களை மறைக்கும் எவனும் வாழ்வடையமாட்டான். ஆனால்,தன் பாவங்களை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான். (நீதிமொழிகள் 28:13)

பாவம் என்றால் என்ன?

முதலாவதாக,"பாவம்"என்ற வார்த்தையானது உலகத்தையும் மக்களையும் ஆளும் ஒரு சக்தியைக் குறிக்கப் பொதுவான பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பாவத்தின் காரணமாக நாம் கர்த்தரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்தப் பாவ சக்தியிலிருந்து விடுபட அவர் நமக்கு ஒரு வழியை வழங்குகிறார்.நாம் அந்த வழியைத் தெரிந்தெடுத்தால், அவர் நமக்கு ஒரு புதிய வாழ்வைத் தருவார் - நாம் “மீண்டும் பிறந்தோம்”.

நீங்கள் மீண்டும் பிறக்கவில்லை அல்லது உங்களுக்குத் தெரியாவிட்டால்: “கர்த்தரின் கதை” மற்றும் “ஞானஸ்நானம்” என்ற பணித்தாள்களைப் பாருங்கள்.

இரண்டாவதாக, “பாவம்” என்ற சொல் கர்த்தரின் குறிப்பிட்ட கட்டளைகளின், தனிப்பட்ட மீறல்களைக் குறிக்கலாம்.எது நல்லது எது கெட்டது என்பதை வரையறுக்க அவருக்கு மட்டுமே உரிமை உண்டு. அவர் நமது சொந்தப் பாதுகாப்புக்காகவே விதிகளை அமைத்துள்ளார். பாவம் என்பது நடத்தை பற்றி மட்டுமல்ல.நமது செயல்கள் உண்மையில் நமது எண்ணங்கள்,மற்றும் ஆசைகளிலிருந்தும் வருகின்றன.இதை மத்தேயு 5: 27-28: இயேசு கிறிஸ்து விளக்குகிறார். “விபச்சாரஞ் செய்யாதிருப்பாயாக' என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன்;ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இதயத்தில் அவளோடே விபச்சாரம் செய்ததாயிற்று.”

நாம் பூரணசற்குணராயிருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்(மத்தேயு 5:48).அதாவது,இது தவறைத் தவிர்ப்பது மட்டுமல்ல சரியானதைச் செய்வதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்: “ ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும் அதைச் செய்யாமற்போனால்,அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.”(யாக்கோபு 4:17).
சுருக்கமாக,பாவம் என்பது கர்த்தரின் மேன்மைக்கு எதிரான எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களுமாகும்.

பாவத்தின் விளைவுகள்

நாம்,நமக்கு எதிராகவும், மற்றவர்களுக்கு எதிராகவும், கர்த்தருக்கு எதிராகவும் பாவம் செய்யலாம்.நமக்கும் மற்றவர்களுக்கும் எதிரான ஒவ்வொரு பாவமும், அவருடைய மக்களுடன் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த கர்த்தரின் விதிகளை மீறுவதாகும்.எனவே இது தானாகவே கர்த்தருக்கு எதிரான பாவமாகும்.யார் பாதிக்கப்பட்டார்கள் என்பதைப் பொறுத்து பாவத்தின் விளைவுகள் அதிகமாக அல்லது குறைவாக இருக்கலாம்:இது என் எண்ணங்களில் மட்டுந்தானா? நான் செயல்பட்டு,அதன் விளைவுகளால் மற்றவர்கள் அனுபவிக்க வேண்டியதா? அல்லது நான் மற்றவர்களை பாவத்தில் தீவிரமாக ஈடுபடுத்தினேனா?

கர்த்தர் விரும்புவதை நாம் செய்யாதபோது,சாத்தான் விரும்பியதை நாம் செய்கிறோம்.கர்த்தர் விரும்புகிறதற்கு எதிர்மாறாகச்செய்யச் சாத்தான் எப்போதும் விரும்புகிறான்.நாம் பாவம் செய்யும்போது,​​சாத்தானுக்கு ஒரு கதவைத் திறந்து,நம் வாழ்வில் அவனுக்கு செல்வாக்கும் கொடுக்கிறோம். இதனை வேறுவிதமாகக் கூறினால்: பாவம் எப்போதும் ஒரு சாபத்தைக் கொண்டு வருகிறது.(உதாரணங்கள்: பொய் சொல்லுபவர் சந்தேகத்திற்குரியவராக மாறுகின்றார்;பேராசை இடைவிடாத அதிருப்திக்கு வழிவகுக்கின்றது;குற்ற உணர்ச்சிகள் நம்மை முடக்குகின்றன).எனவே அந்த சாபத்திலிருந்து விடுபட்டு மீண்டும் சாத்தானுக்குத் திறந்த நம் கதவை மூடுவதற்கான ஒரே வழி பாவத்தை ஒப்புக்கொண்டு அதிலிருந்து முற்றிலும் விலகுவதுதான்.

படிப்படியாக மனந்திரும்புதல்

Pray at the beginning: God, open my eyes to see my sin as you see it.

பாவத்தை கண்டுணர்தல்

நான் பிரச்சினையை புறக்கணிப்பதை நிறுத்திவிட்டு, முற்றிலும் நேர்மையானவனாக மாறுகிறேன்:நான் செய்தது தவறு.என் பாவம் புறக்கணிக்கப்படக்கூடிய சிறிய விடயமல்ல,ஆனால் அது எனக்கும் மற்றவர்களுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.அதற்கான பொறுப்பை இப்போது நான் பொறுப்பேற்கிறேன்.

பாவத்தை அறிக்கை செய்தல்

கர்த்தரிடம் நான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, என்னை மன்னிக்கவும் என்று கூறுகின்றேன்.நான் மற்றவர்களுக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால், நான் செய்த பாவங்களைகளை அவர்களிடம் அறிக்கையிட்டு மன்னிப்பும் கேட்கிறேன்.

பரிகாரம் செய்வது

என் பாவத்தால் மற்றவர்களுக்கு (தீமை,)பாதிப்பு ஏற்பட்டிருந்தால்,என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.நான் பரிகாரம் செய்வதைத் தவிர்த்தால்,நான் செய்த தவறுகளுக்கு உண்மையில் நான் வருத்தப்படவில்லை என்பதற்கான அறிகுறியாகும்.

சிந்தனையும் செயலும் புதுப்பிக்கப்பட்டன

பாவத்திலிருந்து விலகிய பிறகு,அதற்கு பதிலாக கர்த்தர் விரும்புவதை நோக்கித் திரும்புகிறேன்.நான் என் மனதையும் என் பழக்கவழக்கங்களையும் சரிபார்த்து,அவருடைய யோசனைகளின்படி சிந்திக்கவும் வாழவும் தொடங்குறேன்.அவ்வாறு செய்ய எனக்கு ஊக்கமளிக்கும்படி கர்த்தரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இறுதியில் கேளுங்கள்:இந்தப் பாவத்திலிருந்து கர்த்தர் என்னை மன்னித்துவிட்டார் என்பதில் நான் உறுதியாக உள்ளேனா?
உங்கள் பதில் இல்லை என்றால்,ஒரு உதவியாளரின் உதவியைத் தேடுங்கள்.

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1 யோவான் 1: 9)

மேலதிக குறிப்புக்கள்

Remorse
If I try to omit a step it’s a sign that I don’t really regret all of what I did.
ஒரு உதவியாளரின் உதவியைப் பயன்படுத்துதல்
மனந்திரும்புதலுக்குத் தேவையான அனைத்துப் படிகளையும் அடிக்கடி நம்மால் மட்டும் கடந்து செல்வது மிகவும் கடினமாகும்.பாவம் இனி ஒரு ரகசியமாக இல்லாதபோது,அது தன் வலிமையை இழக்கிறது. அதனால் தான் யாக்கோபு 5:16ல் இந்தப் படிகளை மட்டும் கடந்து செல்ல கூடாதென்று நம்மை ஊக்குவிக்கிறது: "ஆகையால் உங்கள் பாவங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு,ஒருவருக்கொருவர் ஜெபம் செய்வதால் நீங்கள் குணமாகலாம்.
எங்கள் மனசாட்சி
நாம் ஒரு சட்டத்தை மீறப் போகும்போது நமது உள் மனதில் யாரோ பேசுவது போல நம் மனசாட்சி நம்மை எச்சரிக்கும். இது நாம் வளர்ந்த சூழல் "சரி" மற்றும் "தவறு" என்று கருதப்பட்ட சூழலால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை கர்த்தரின் மேன்மையான நிலைக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை.நம் மனசாட்சியை மட்டும் நம்பி இருக்க முடியாது என்பதே இதன் அர்த்தமாகும். சில நேரங்களில் நம் மனசாட்சி நமக்கு தவறான எச்சரிக்கைகளையும் கொடுக்கலாம்,மற்ற பகுதிகளில் அது மந்தமானதாக இருக்கலாம்,மற்றும் கர்த்தரின் பார்வையில் ஏதோ ஒன்று பாவமாக இருந்தாலும் நம்மை எச்சரிக்காது. கர்த்தர் எதையாவது பாவமாகப் பார்க்கிறாரா என்று நாம் அவரிடம் கேட்டு அறியவேண்டும்.அவர் ஏதோ ஒன்றைப் பாவமாகப் பார்த்தால்,அதற்கேற்ப நம்முடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அவரால் மாற்றப்படும்.
;எந்தச் சூழலில் நான் பாவத்தை அறிக்கை செய்யவேண்டும்?
பாவத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடமும் அதன் விளைவுகளையும் எப்போதும் அறிக்கை செய்யவேண்டும். மனிதர்கள் பலர் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது எனது பாவம் என்னை என் பங்கிலிருந்து தகுதி நீக்கம் செய்தால் (உதாரணம்.ஒரு தலைவராக),நான் அதை எல்லோருக்கும் முன்பாகவோ அல்லது பகிரங்கமாகவோ ஒப்புக்கொண்டு அறிக்கை செய்யவேண்டும்.என் எண்ணங்களில் மட்டும் ஒருவருக்கு எதிராக நான் பாவம் செய்திருந்தால்,அதை நான் கர்த்தரிடம் அறிக்கை செய்ய வேண்டும்,அந்த நபரிடம் எடுத்துச் செல்லக்கூடாது.
எந்தச் சூழல் பொருத்தமானது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், இந்தச் செயல்பாட்டின் மூலம் உங்களுக்கு உதவி செய்யும் நபரிடம் கேளுங்கள்.

என்னை தானே பரீட்சிப்பது

கலாத்தியர் 5: 19-21-ஐ வாசியுங்கள்.கர்த்தரிடம் கேட்க இரண்டு நிமிடங்கள் ஒதுக்கிப் பின்வரும் கேள்வியை அவரிடம் கேட்டுக் குறிப்புகளை எழுதுங்கள்:

கர்த்தரே,நான் உமக்கு எதிராக அல்லது மற்றவர்களுக்கு எதிராக எங்கே பாவம் செய்தேன்?

விண்ணப்பம்

எந்த விடயங்களை நான் முதலில் கையாளவேண்டும்? இந்த விடயத்தில் யார் எனக்கு உதவி செய்யவேண்டும்?
நீங்கள் எப்படித் தொடருவீர்கள் என்பதை குறிப்பாகத் தெளிவுபடுத்துங்கள்!